வைரமுத்துவை நோக்கி அடுத்தடுத்து செருப்புகளை வீசிய பெண்.. திருப்பூரில் பகீர் சம்பவம்!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த வைரமுத்துவுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது கூட்டத்திற்கு வெளியே இருந்த பெண் ஒருவர் தான் அணிந்துருந்த ஷூவைக் கழட்டி கூட்டத்தின் நடுவே வீசினார். அதாவது அவர் வீசிய ஷூ கூட்டத்தின் நடுவே நின்று கொண்டு இருந்த வைரமுத்து மீது படாமல், அவருக்கு வரவேற்பு வழங்கி வந்தவரின் தலையை பதம் பார்த்து கடந்து சென்றது. இதை யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்த பெண்மணி வீசிய செருப்பு நொடிப்பொழுதில் வைரமுத்துவைக் கடந்து விட்டது.

Lady Who Try To Attack Vairamuthu and Threw Her Two Slippers towards Him At Tiruppur
Photo Credit:

அந்த பெண் வீசிய செருப்பு வைரமுத்து மீது படவில்லை. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் செருப்பு வீசிய பெண் குறித்த விசாரணையில் முதற்கட்ட தகவலாக அவர் பெயர் ஜெயா என்றும் அவர் மனநலன் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இலக்கியத் தளத்திலும் ஆளுமையாக வலம் வருபவர் கவிஞர் வைரமுத்து. 80களில் தொடங்கிய இவரது சினிமா பயணம் இன்றும் கொடிகட்டி பறந்து வருகிறது. தமிழ் திரையிசை பாடல்களில் வைரமுத்து ஒரு தனி சகாப்தம் என்றே கூறலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X