twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "ஹெவி" விலைக்கு விற்றுப் போன பாகுபாலி ஆடியோ உரிமை!

    |

    ஹைதராபாத்: தென்னிந்தியத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாகுபாலி தெலுங்குப் படத்தின் ஆடியோ உரிமை மிகப் பெரிய விலைக்கு விற்று சாதனை படைத்துள்ளதாம். ரூ. 3 கோடி அளவுக்கு அதன் ஆடியோ உரிமை போயுள்ளதாம்.

    ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள பாகுபாலி, இந்தியாவிலேயே மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவான படம் என்கிறார்கள். 2 வருடங்களுக்கு முன்பு ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட படம் இது. ஆனால் இன்று அதன் செலவு ரூ. 200 கோடியைத் தாண்டியிருக்கும் என்கிறார்கள்.

    பட்ஜெட் அடிப்படையில் பார்த்தால் இந்தப் படம்தான் இந்தியாவிலேயே பெரிய படம். அப்படிப்பட்ட படத்தின் ஆடியோ உரிமையும் பெரிய தொகைக்கு விற்றுள்ளது. அதேபோல செயற்கைக் கோள் உரிமையும் கூட மிகப் பெரிய விலைக்குப் போயுள்ளதாம். அதாவது ரூ. 25 கோடிக்கு விற்றுள்ளதாக சொல்கிறார்கள்.

    லஹரி வசம் ஆடியோ

    லஹரி வசம் ஆடியோ

    தமிழ் மற்றும் தெலுங்குப் பாடல்களுக்கான உரிமையை பெங்களூரைச் சேர்ந்த லஹரி ஆடியோ வாங்கியுள்ளது. இதற்காக அது செலவிட்ட தொகை ரூ. 3 கோடியாம். மொத்தம் 9 பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கில் இதுவரை சேர்ந்தோ அல்லது தனித்தோ எந்தப் படத்தின் ஆடியோவும் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்கப்பட்டதில்லையாம்.

    "பஸ்" ஜாஸ்தி பாஸ்!

    படம் குறித்த ஹைப் ஜாஸ்தியாக இருப்பதே இந்த பெரிய விலைக்குக் காரமம் என்கிறார்கள். படத்தின் உரிமையை வாங்குவதற்காக லஹரி ஆடியோ நிறுவன உரிமையாளர் மனோகர் நாயுடுவும், அவரது மகன் சந்திரகுமாரும் 15 நாட்களாக ஹைதராபாத்திலேயே தேவுடு காத்து வந்தார்களாம்.

    உறுதிப்படுத்திய துள்சிராம் நாயுடு

    உறுதிப்படுத்திய துள்சிராம் நாயுடு

    இந்த டீல் குறித்து உறுதி செய்துள்ள லஹரி நிறுவனத்தின் துள்சிராம் நாயுடு, டீல் முடிந்து விட்டது என்று கூறினார். ஆனால் விலையை கூறவில்லை. இருப்பினும் அது ரூ. 3 கோடி என்று தெலுங்குத் திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    கன்னடத் தொடர்பு

    கன்னடத் தொடர்பு

    துள்சிராம் நாயுடு மேலும் கூறுகையில், இப்படம் கன்னடத்தில் உருவாகவில்லை என்ற போதிலும் கன்னடத் தொடர்புகளும் இதில் உள்ளன. கன்னட நடிகர்களான சுதீப்பும், அனுஷ்கா ஷெட்டியும் இதில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த எங்களது நிறுவனம் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளது. ராஜமெளலியே கூட கர்நாடகத்தில் பிறந்தவர்தான் என்றார்.

    தளபதிக்கு 72 லட்சம் கொடுத்த கம்பெனி

    தளபதிக்கு 72 லட்சம் கொடுத்த கம்பெனி

    லஹரி பெரிய தொகைக்கு ஆடியோ உரிமையை வாங்குவதில் கில்லாடி ஆகும். 1992ம் ஆண்டு ரஜினி நடித்த தளபதி படத்தின் ஆடியோ உரிமையை அப்போது பெரிய விலையான ரூ. 72 லட்சத்துக்கு வாங்கியது. அப்போது சிடி கிடையாது. எல்லாமே கேசட்தான்.

    கன்னடத்தைத் தாண்டி

    கன்னடத்தைத் தாண்டி

    முன்பு கன்னடத் திரையுலகோடு அதிகம் நின்று விட்ட லஹரி சமீப காலமாக தெலுங்கிலும் வேகமாக காலூன்றி வருகிறது. பல முக்கியப் படங்களின் ஆடியோ உரிமையை கைப்பாற்ற கடுமையாக போட்டி போடுகிறது.

    கேசட் சாதனையாளர்

    கேசட் சாதனையாளர்

    கேசட் விற்பனையில் தென்னிந்தியாவில் சாதனை படைத்த நிறுவனம் ஹலரி. கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடித்து வெளியான பிரேமலோகா படத்தின் கேசட்களை 38 லட்சம் கேசட்கள் வெளியிட்டு சாதனை படைத்தது இந்த நிறுவனம். இன்னும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bangaluru based Lahari has snatched the audio rights of the much touted costliest film Bahbali for record price of Rs 3 crores.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X