லைலாவுக்கு ஆண் குழந்தை!
சிரிப்பழகி லைலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சிரிப்பழகி லைலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.கள்ளழகர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லைலா. அதன் பின்னர் பெரிய பிரேக் இல்லாமல் வந்து போய்க் கொண்டிருந்த லைலாவுக்கு, பார்த்தேன் ரசித்தேன் பெரிய உயர்வைக் கொடுத்தது.
இந்தப் படத்திற்குப் பின்னர்தான் நிறையப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் லைலா. முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு அசத்தினார்.
சூர்யாவுடன் அவர் நடித்த நந்தா, விக்ரம், சூர்யாவுடன் நடித்த பிதாமகன் ஆகிய இரு படங்களும் அவரது அட்டகாச நடிப்புக்கு நல்ல சான்றாக அமைந்தது.
பிதாமகனுக்குப் பிறகு படங்களில் நடிப்பதிலிருந்து பின் வாங்க ஆரம்பித்தார். இயக்குநர் பாலாவைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என செய்தி கிளம்பியது. ஆனால் திடீரென மும்பைவாலாவான மெஹதி என்பவரை திடீரென கல்யாணம் செய்து கொண்டார் லைலா.
கல்யாணத்திற்குப் பின்னர் குடியும், குடித்தனமுமாக மாறிய லைலாவுக்கு தற்போது அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மும்பையில் உள்ள மருத்துவமனையில் லைலாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை லைலாவின் பெற்றோர் கோலிவுட்டுக்கு பாஸ் செய்துள்ளனர். தாயும், சேயும் நலமாக இருக்கிறார்களாம்.
லாலி போடப் போகும் லைலாவுக்கு வாழ்த்துக்கள்!


Click it and Unblock the Notifications











