டிவி பார்த்து பிளாஷ்பேக்...பிதாமகன் அனுபவங்களை பகிர்ந்த லைலா

சென்னை : டைரக்டர் பாலாவின் படங்களில் முக்கியமானது பிதாமகன். இந்த படத்தில் சூர்யா, விக்ரம் இருவரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தபடம் அடிக்கடி டிவி சேனல்களிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Laila reminisces about shooting for Pithamagan

பிதாமகன் படத்தில் ஹீரோயின்களில் ஒருவராக நடித்த லைலா, தற்போது பிதாமகன் படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். டிவியில் தான் நடித்த காட்சியை பார்த்த லைலா, அதனை ஸ்கிரீன்ஷாட் உடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து, கருத்து பதிவிட்டுள்ளார்.அதில், இன்று பகல் 1 மணிக்கு கே டிவி.,யில் பிதாமகன் படம் பார்த்தேன். இதில் குறிப்பிட்ட ரயில் சீனை மட்டும் 10 நாட்கள் படமாக்கினர். தேனியில் உள்ள இரண்டு ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த காட்சி எடுக்கப்பட்டது. ஐ லவ் தேனி. இந்த காட்சி படமாக்கப்பட்டபோது நிறைய ஜாலியான அனுபவங்கள் கிடைத்தது என தெரிவித்திருந்தார்.

லைலாவை ஏமாற்றும் சூர்யாவின் காமெடி மிகவும் பிரபலம். லைலா - சூர்யா இடையேயான சீன்கள் சூப்பர்ஹிட் ஆகின. சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X