நடனம் பிடிக்கும்.. அதுவும் குழந்தைகள் ஆடினால் ரசிப்பேன்.. நடிகை லைலா

சென்னை : நடனம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும், அதுவும் குழந்தைகள் ஆடுகிறார்கள் என்றால் சொல்லவே வேண்டாம் ரசித்து பார்ப்பேன் என்று நடிகை லைலா ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார்.

90களின் இறுதியில் இருந்து 2000த்தின் பாதி வரை தமிழ் சினிமாவில் லைலாவிற்கு என்று தனி இடம் உண்டு. கண்களை சிமிட்டி, சிமிட்டி இவர் சிரிக்கும் சிரிப்பின் மூலம் அனைவரின் மனதையும் அவர் சீக்கிரமாக கவர்ந்து இழுத்து விடுவார். லைலாவை பிடிக்காத ரசிகர்களே இருக்க முடியாது என்று கூட சொல்லலாம்.

Laila said I love dance

லைலா கல்யாணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டார். அவருக்கு இரு குழந்தைகளும் இருக்கிறது. தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு ஜீ தமிழின் ஒரு நடன போட்டியின் நடுவராக பங்கேற்று வருகிறார். இதை பற்றி சில நேர்காணல்களில் சில சுவாரஸ்யமான தகவல்களையும் மற்றும் சில அனுபவங்களை பற்றியும் பகிர்ந்து இருக்கிறார் லைலா .

எனக்கு மக்கள் வைத்த செல்ல பெயர் குல்ஃபி, இந்த பெயரை என்னால் மறக்கவே முடியல, ஒரு எவர்கிரின் பெயர் இது என்று கூறினார். லைலாவின் சேட்டை மிகுந்த குறும்புத்தனத்திற்காக அந்த பெயர் வந்தது .

Laila said I love dance

நீண்ட நாட்களுக்கு பின் லைலா மீண்டும் நடுவராக நடன நிகழ்ச்சியில் பங்கு பெற ஒரு முக்கிய காரணம் குழந்தைகள் தான் என்றார். எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறினார். ஒவ்வொரு குழந்தைகள் ஆடுவதை ரசித்து பார்ப்பேன். அதுவும் ரொம்ப நல்லா இருக்கும் ஆதனால் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டே என்றார்.

Laila said I love dance

மேலும் லைலா தமிழில் அலைஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2019ல் துவங்கியது ஆனால் சில காரணங்களுக்காக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கபட்டு இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் நிச்சயம்லைலாவுக்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Laila said I love dance

நடிகை லைலா நகைச்சுவை கலந்து நடிக்க கூடிய கதாநாயகி அப்படிப்பட்ட கதாநாயகிகள் குறைவு தான். பல படங்களில் நகைச்சுவை நிறைந்த நாயகியாகவே நடித்திருக்கிறார் ,காமெடியன்களுக்கு இணையாக நகைச்சுவையை லைலாவும் வழங்குவார் அதனாலே பல ரசிகர்களுக்கு லைலா என்றால் மிகவும் பிடிக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X