என்னை லேடி சூப்பர் ஸ்டார்னு கூப்பிடுறாங்க.. கோட் படத்தில் நடித்த அனுபவம்.. லைலா பளிச் பேட்டி!
சென்னை: கோவாவில் பிறந்து வளர்ந்த லைலா 1996 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான துஷ்மன் துனியாக்கா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்த அவர் 1999 ஆம் ஆண்டு கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதே ஆண்டு தமிழில் வெளியான ரோஜாவனம் மற்றும் முதல்வன் படத்திலும் நடித்திருந்தார். பிரசாந்துடன் பார்த்தேன் ரசித்தேன், அஜித்தின் தீனா, விக்ரமின் தில், சூர்யாவுடன் நந்தா, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே மற்றும் பிதாமகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பிதாமகன் படத்தில் அவர் சொல்லும் லூசாப்பா நீ வசனமெல்லாம் ஏகப்பட்ட பெண்களின் ஃபேவரைட்டான வசனம் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள லைலா அந்த படம் பற்றியும் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்தும் பேசியுள்ளார்.
தொழிலதிபருடன் திருமணம்: கடந்த 2006-ஆம் ஆண்டு ஈரானிய தொழிலதிபர் மெஹ்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை லைலா. 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார். மும்பையில் குடியேறிய லைலா இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது ஒரு மகனுக்கு 14 வயது மற்றொரு மகனுக்கு 12 வயது ஆகிறது. 43 வயதான நடிகை லைலா பல ஆண்டுகள் கழித்து கார்த்தியின் சர்தார் படத்தில் நடித்த நிலையில், தற்போது விஜய்யுடன் இணைந்து கோட் படத்தில் நடித்துள்ளார்.

மிஸ் ஆன விஜய் படம்: உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய் தான் ஹீரோ. அவருடன் இணைந்து ஒரு பாடலுக்கும் டூயட் பாடியிருந்தார் நடிகை லைலா. ஆனால், அதன் பின்னர் அந்த படத்திலிருந்து விஜய் விலகிய நிலையில் சூர்யா அந்த படத்தில் நடித்தார். விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட லைலா பல ஆண்டுகள் கழித்து தனது கனவு கோட் படத்தின் மூலம் நிறைவேறி விட்டதாக கூறியுள்ளார்.

இதிலும் சினேகா: உன்னை நினைத்து படத்தில் சினேகா தான் ஹீரோயின். லைலாவை சூர்யா காதலித்தாலும், அவரை ஏமாற்றிவிடுவார். லைலாவுக்கு அந்த படத்திலேயே இரண்டாவது ஹீரோயின் ரோல்தான். அதேபோல தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தில் சினேகா தான் விஜய்க்கு ஜோடி. லைலா பிரசாந்துக்கு ஜோடியா? அல்லது சிறிய ரோலா என்பது படம் வெளியானால் தெரிந்து விடும்.

லேடி சூப்பர் ஸ்டார்: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகை நயன்தாரா தான். சமீபத்தில் திருநெல்வேலிக்கு படப்பிடிப்புக்கு சென்றிருந்தபோது ரசிகர்கள் தன்னை லைலா லேடி சூப்பர் ஸ்டார் என அழைத்தார்கள். அது தனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. எங்க காலத்துல சோசியல் மீடியா பெரிதாக இல்லை. ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கு பெரிதாக அமையவில்லை என்றும் கூறியுள்ளார் லைலா. கோட் திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் இத்தனை நடிகர்களுடன் நடிப்பது தனக்கு கிடைத்த பாக்கியம் என்றும் கூறியுள்ளார். சப்தம் படத்திலிருந்து லைலா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











