இப்படி வெட்டிட்டாரே மணி... புலம்பும் டாப்ஸியின் 'மதினி'!

By Sudha

சென்னை: ராவணன் படத்தின் மூலம் பிரியா மணியை புலம்ப விட்டார் மணிரத்தினம். இப்போது லட்சுமி மஞ்சுவைப் புலம்ப விட்டுள்ளார்.

மணிரத்தினத்தின் கடல் பலரையும் புலம்ப வைத்துள்ளது. படத்தின் நாயகன் கெளதமுக்கும், நாயகி துளசிக்கும் இப்படம் பெரும் அப்செட்தானாம். அறிமுகப் படம் பெரிதாக போகவில்லை என்பதால் இந்த வருத்தம்.

அதேபோல இன்னொருவரும் பெரும் வருத்தத்தில் இருக்கிறாராம் அவர்தான் லட்சுமி மஞ்சு. இவர் தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகள் ஆவார். நடிகர் மனோஜ் மஞ்சுவின் அக்காள். நடிகர் டாப்ஸியின் நெருக்கமான நட்புக்காக மங்காத்தா நடிகர் மகத்துடன் அடித்துக் கொண்டாரே அதே மனோஜ்தான்.

அர்ஜூனுக்கு ஜோடி

அர்ஜூனுக்கு ஜோடி

லட்சுமி மஞ்சு கடல் படத்தில் நிறையக் காட்சிகளில் நடித்திருந்தாராம். அர்ஜூனுடன் டூயட்டெல்லாம் பாடியிருந்தார். ஆனால் பெரும்பாலான காட்சிகளை படத்திலிருந்து தூக்கி விட்டார் மணி. பாடலையும் காணோம்.

பெரும் வருத்தம்

பெரும் வருத்தம்

இப்படி தனது காட்சிகளை வெட்டி தூக்கி விட்டதால் மணி ரத்தினம் மீது பெரும் வருத்தமாக இருக்கிறாராம் லட்சுமி மஞ்சு.

இருந்தாலும் பரவாயில்லை

இருந்தாலும் பரவாயில்லை

இருந்தாலும், மணிரத்தினம் மீது அவருக்குக் கோபம் வரவில்லையாம். மணி சார் எதைச் செய்தாலும் காரணத்தோடுதான் செய்வார்.எனவே எனது காட்சிகளை வெட்டியது குறித்து நான் வருத்தப்படவில்லை என்று கூறுகிறாராம் லட்சுமி.

மணி வெட்டுவது முதல் முறையல்ல

மணி வெட்டுவது முதல் முறையல்ல

ஆனால் மணிரத்தினம், நாயகிகளை இப்படி நடிக்க வைத்து நட்டாற்றில் விடுவது முதல் முறையல்ல. முன்பு இப்படித்தான் ராவணன் படத்தில் பிரியாமணி, ரஞ்சிதா ஆகியோரை நடிக்க வைத்தார். பின்னர் படத்தில் பார்த்தால் ரஞ்சிதாவைத் தேடிப் பார்க்க வேண்டியதாயற்று. அதே கதிதான் பிரியாமணிக்கும்.

அடுத்த தடவையாவது நடிக்க வச்ச எல்லாப் பேரையும் மறக்காம ஸ்கிரீன்லயும் காட்டிடுங்க மணி சார்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X