லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர்களில் ஒருவரான ராமன் தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி.. போலீஸ் தீவிர விசாரணை
சென்னை: லஷ்மன் ஸ்ருதி உரிமையாளர் ராமன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகமெங்கும் இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகளை நடத்தி வரும் பிரபல இசைக்குழு லக்ஷ்மன் ஸ்ருதி. இதன் உரிமையாளர் லக்ஷ்மணன் மற்றும் ராமன் சகோதரர்கள்.
இவர்களில் ராமன் சென்னையில் உள்ள அசோக் நகரில் சொந்த வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ராமன் திடீரென நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாதியிலேயே
நேற்று சென்னை காமராஜர் அரங்கில் இசைக்கச்சேரியை நடத்திக்கொண்டிருந்தார் ராமன். அப்போது திடீரென பாதியிலேயே வெளியேறிய ராமன் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

திடீர் தற்கொலை
வீட்டிற்கு வந்த ராமன் திடீரென தற்கொலை செய்துக்கொண்டார். ராமன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரணம்?
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல்நலக்குறைவு
இதனிடையே கடந்த 5 மாதங்களாக ராமன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தீராத கடும் வலியால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது சகோதரர் லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

தற்கொலை காரணம்
இதனால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் லக்ஷ்மன் தெரிவித்திருக்கிறார்.

போலீஸ் விசாரணை
உண்மையிலேயே அவர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும் அதிர்ச்சி
பிரபல இசைக்குழுவின் உரிமையாளரான தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்த பலரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











