Sweet Kaaram Coffee: வீட்டிற்குள் அடங்கி வாழ்ந்தது போதும்.. ஸ்வீட் காரம் காபி டிரைலர் ரிலீஸ்!

சென்னை: லட்சுமி, மதுபாலா,சாந்தி நடிப்பில் உருவாகி உள்ள ஸ்வீட் காரம் காபி என்ற ஒரிஜினல் சீரிஸின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

எட்டு எபிசோட்கள் கொண்ட இத்தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

இந்த சீரிசை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் அழகாக இயக்கியுள்ளனர்.

ஸ்வீட் காரம் காபி: லயன் டூத் ஸ்டூடியோஸ் சார்பில் ரேஷ்மா கட்டாலா தயாரித்துள்ள ஸ்வீட் காரம் காபி என்ற புதிய இணையத் தொடரை மூன்று பெண் இயக்குநர்கள் இணைந்து இயக்கி உள்ளனர். லட்சுமி, மது, சாந்தி என்ற மூன்று பெண்களை மையமாக வைத்து இத்தொடர் இயக்கப்பட்டுள்ளது. இதில் நீண்ட நாட்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த லட்சுமி ஸ்வீட் காரம் காபி தொடரில் நடித்துள்ளார்.

Lakshmi and Madhoo starring Sweet Kaaram Coffee new web series trailer out

மூன்று பெண்களின் கதை: ஸ்வீட் காரம் காபி சீரின் டிரைலர் என்று முன் வெளியாகி உள்ளது. அதில், சமைப்பது, குழந்தைகளை பார்த்துக்கொள்வது, துணி துவைப்பது என குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போன மூன்று பெண்கள் தங்களது வாழ்க்கையை வாழ நினைத்து வீட்டை விட்டு வெளியேறி காரில் மகிழ்ச்சியாக சுற்றுகின்றனர்.

அமேசான் பிரைமில் ஜூலை 6ந் தேதி: எந்திரத் தனமான இந்த வாழ்க்கையில் தினமும் பணத்தைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம். பணம் தேவை என்பது வாழ்க்கையில் முக்கியமாகி விட்டதால் வீட்டில் ஒருவருடன் ஒருவர் பேசுவதற்குகூட போதிய நேரம் ஒதுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மன அழுத்தத்தில் இருக்கும் மூன்று பெண்களின் கதை தான் ஸ்வீட் காரம் காபி தொடரின் கதை. இத்தொடர் அமேசான் பிரைமில் ஜூலை 6ந் தேதியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது.

தயாரிப்பாளர் ரேஷ்மா கட்டாலா: இத்தொடர் குறித்து பேசிய தயாரிப்பாளர் ரேஷ்மா கட்டாலா, 'ஸ்வீட் காரம் காபி' தொடர் ஒரு குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கும் பிணைப்பை எடுத்து காட்டும் தொடராக உள்ளது. மூன்று வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள் குறித்து பேசும் இத்தொடரை பிஜாய், கிருஷ்ணா மற்றும் சுவாதி ஆகியோர் அழகாக இயக்கியுள்ளனர். லட்சுமி, மதுபாலா மற்றும் சாந்தி ஆகியோரின் நடிப்பு பாராட்டும் வகையில் உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X