ரிலீசானது சங்கமம் பாட்டா…? லக்‌ஷ்மி பாட்டா…? குழம்பிய ரசிகர்கள்!

Recommended Video

இன்று ஆடியோ லான்ச் செய்யும் 4 படங்கள்- வீடியோ

சென்னை: லக்‌ஷ்மி படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லரும் கோலமாவு கோகிலா பட பாடலும் ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தித்யா பாந்தே, கருணாகரன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் திரைப்படம் லக்‌ஷ்மி. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் ஆன்லைனில் வெளியிட்டார்.

Lakshmi and Kolamaavu kokila audio released!

லக்‌ஷ்மி திரைப்படத்தின் இறைவா... இறைவா... பாடலை இயக்குனர் வெங்கட்பிரபு ஆன்லைனில் வெளியிட்டார். மதன் கார்க்கியின் வரிகளில் அமைந்த இந்த பாடல் ஏஆர். ரகுமான் இசையில் வெளிவந்த சங்கமம் திரைப்படத்தின் மழைத்துளி... மழைத்துளி... பாடல் போல் இருப்பதாக ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர்.

இப்படத்தில் உள்ள ட்ரீமி செல்லம்மா பாடலை இயக்குனர் கௌதம் மேனன் வெளியிட்டார். எழுச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நில்லாதே நில்லாதே எனும் பாடலை நடிகர் சித்தார்த் வெளியிட்டு, வெற்றி தோல்வி இரண்டும் ஒன்று என்று ட்வீட் செய்துள்ளார்.

இதேபோல், நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் கோலமாவு கோகிலா திரைப்படத்தில் ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்ட இரண்டு பாடல்களோடு சேர்த்து அனிருத் இசையமைத்த ஆறு பாடல்களும் வெளியிடப்பட்டன.

இந்தப்படத்தின் ட்ரெய்லரையும் அனிருத் வெளியிட்டுள்ளார்

வெளியிடப்பட்ட பாடல்களில், "கபிஸ்கபா..."என்ற பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். திட்டம்போட தெரியலயா மற்றும் "கன்-இன்-காதல்..." என்ற பாடலை நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X