Lakshmi Manchu : அந்தரத்தில் பறந்து பறந்து டூப் இல்லாமல் சண்டை.. சூப்பர் ஸ்டாரின் மகள்!

சென்னை : தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் மகளான நடிகை லக்ஷ்மி மஞ்சு படப்பிடிப்பு தளத்தில் டூப் இல்லாமல் ஸ்டன்ட் காட்சிகளில் நடித்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லக்ஷ்மி மஞ்சு. இவர், ஹாலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கடல் படத்தின் மூலம் அறிமுகமானார். மறந்தேன் மன்னித்தேன் என்ற டப்பிங் படத்திலும் நடித்திருந்தார் லக்ஷ்மி மஞ்சு.

Lakshmi Manchu performing stunt scene without any doop for her upcoming untitled movie

டூப் இல்லாமல்:2018ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான காற்றின் மொழி படத்தில் ரேடியோ ஸ்டேஷன் ஹெட்டாக நடித்திருந்தார் லக்ஷ்மி மஞ்சு. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார். தற்போது படங்களில் பிஸியாக நடித்து வரும் லக்ஷிமி மஞ்சு முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சண்டை காட்சியில் டூப் இல்லாமல் நடித்து வருகிறார்.

Lakshmi Manchu performing stunt scene without any doop for her upcoming untitled movie

குவியும் பாராட்டு:தெலுங்கு, தமிழ், மலையாளம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் லக்‌ஷ்மி மஞ்சு, இன்னும் தலைப்பு வைக்காத படத்திற்காக டூப் இல்லாமல் தலைகீழாக தொங்கு புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இணையத்தில் வெளியான அந்த புகைப்படத்தைப பார்த்த ரசிகர்கள் அவரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

விரைவில் ரிலீஸ்:தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்மோகன் பாபுவின் மகளான லக்ஷிமி மஞ்சு, தனது தந்தையுடன் இணைந்து அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Lakshmi Manchu performing stunt scene without any doop for her upcoming untitled movie

இதுதான் காரணம்:சமீபத்தில் பேட்டி அளித்த லக்ஷிமி மஞ்சு, தமிழ்ப் படங்களில் நடிக்க நான் ஆர்வமாகவே இருக்கிறேன். இதுவரை வந்த எந்த ஒரு தமிழ்ப் பட வாய்ப்பையும் நான் நிராகரித்ததில்லை. அதேபோல், இப்படி தான் நடிப்பேன், அப்படித்தான் நடிப்பேன் என்று சொன்னதும் இல்லை. இருந்தாலும், நான் பெரிய நடிகரின் மகள் என்பதால், என்னை ஒரு நடிகையாக அணுக யோசிக்கிறார்கள். நான் எப்படி நடந்துக்கொள்வேனோ, என்னை வைத்து எப்படி படமாக்குவது, என்றெல்லாம் யோசிக்கிறார்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X