கிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்!

கொச்சி : தமிழில் தொடர் வெற்றிப் படங்களில் நடித்து தனக்கான பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி மேனன்.

சுந்தரபாண்டியன், கும்கி, ஜிகர்தண்டா, பாண்டிய நாடு என எண்ணற்ற திரைப்படங்கள் இவரது நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றதோடு வசூலிலும் மாஸ் காட்டின.

நடிப்பு, நடனம் என அனைத்திலும் கை தேர்ந்தவர் லட்சுமி மேனன் குச்சுப்புடி, கதகளி, பரதநாட்டியம் உள்ளிட்ட கிளாசிக்கல் நடனத்திலும் கை தேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆள் உயரத்திற்கு காலை உயர்த்தி நடனமாடியவாறு வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அசந்து போயுள்ளனர்.

சுந்தரபாண்டியன்

சுந்தரபாண்டியன்

சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்த லட்சுமி மேனன் மலையாளத்தில் ஓரிரு திரைப்படங்களில் நடித்த நிலையில் தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான "சுந்தரபாண்டியன்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

தொடர் வெற்றியை

தொடர் வெற்றியை

கவர்ச்சி காட்டாத யதார்த்தமான நடிப்பு, அட்டகாசமான நடனம் என ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பங்கள் கொண்டாடும் சிறந்த நடிகையாக வலம் வந்த லட்சுமி மேனன் "சுந்தரபாண்டியன்" திரைப்படத்திற்கு பிறகு நடித்த அடுத்தடுத்த படங்கள் தொடர் வெற்றியை பெற்று வசூலிலும் மாஸ் காட்டியது.

ரசிகர்கள் அப்செட்

ரசிகர்கள் அப்செட்

இந்நிலையில் தமிழ் ரசிகர்களிடம் ஃபேவரிட் ஹீரோயின் என பெயரெடுத்த லட்சுமி மேனன் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து "றெக்க" திரைப்படத்தில் நடித்ததற்கு பின் இன்று வரை எந்த ஒரு திரைப்படங்களும் வெளியாகாததால் இவரது ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.

பேச்சி

பேச்சி

மேலும் கௌதம் கார்த்திக்குடன் இவர் இணைந்து நடித்து வரும் "சிப்பாய்" பிரபுதேவாவுடன் நடித்துவரும் "எங் மங் சங்" உள்ளிட்ட திரைப்படங்கள் பல ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் இப்பொழுது இவர் முதன் முறையாக விக்ரம் பிரபுவுடன் இணைந்து "பேச்சி " என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

நேரடியாக ஓடிடி தளத்தில்

நேரடியாக ஓடிடி தளத்தில்

குட்டி புலி, கொம்பன் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்ததை தொடர்ந்து இயக்குனர் முத்தையா உடன் மூன்றாவது முறையாக இணைய உள்ள லட்சுமி மேனனை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது என கூறப்படுகிறது.

கிளாசிக்கல் டான்ஸை

கிளாசிக்கல் டான்ஸை

லட்சுமி மேனன் அவ்வப்போது வெளியிடும் அட்டகாசமான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வரும் நிலையில் இப்பொழுது கிளாசிக்கல் டான்ஸை அசால்ட்டாக ஆடியவாறு ஆள் உயரத்திற்கு காலை உயர்த்தியுள்ள புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் உட்பட பலரும் அசந்து போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X