ஆஹா நம்பவே முடியலையே.. எப்படி இவ்ளோ ஸ்லிம்? ஒல்லிபெல்லி ஆன பிரபல ஹீரோயின்.. வைரலாகும் போட்டோஸ்!

By

சென்னை: பிரபல நடிகை, நம்ப முடியாத அளவுக்கு ஒல்லி பெல்லியாகி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Recommended Video

CHUBBY யாதான் சாதிச்சோம் | REWIND RAJA EP-03 | FILMIBEAT TAMIL

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை லக்ஷ்மி மேனன். வினயன் இயக்கிய ரகுவின்டே சொந்தம் ரஸியா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.

அடுத்து வினித் ஜோடியாக ஐடியல் கபுள் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது.

சுந்தரப்பாண்டியன்

சுந்தரப்பாண்டியன்

வழக்கமாக, கேரளாவில் இருந்து நடிகைகளை இறக்குமதி செய்யும் கோடம்பாக்கம் இவரையும் இறக்குமதி செய்தது. தமிழில் பிரபுசாலமன் இயக்கிய கும்கி, சசிகுமார் ஜோடியாக, சுந்தரப்பாண்டியன், குட்டிப்புலி, விஷால் ஜோடியாக பாண்டியநாடு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா உள்பட பல படங்களில் நடித்தார்.

குக்குறு குக்குறு

குக்குறு குக்குறு

அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம், றெக்க. விஜய் சேதுபதி ஜோடியாக இதில் நடித்திருந்தார். பிரபுதேவாவுடன் அவர் நடித்துள்ள யங் மங் ஜங் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. சில படங்களில் பின்னணியும் பாடியுள்ளார் லட்சுமி மேனன். ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் இமான் இசையில் குக்குறு குக்குறு குக்குறு என்ற பாடலை பாடியுள்ளார்.

பரதநாட்டியம்

பரதநாட்டியம்

இந்நிலையில் அவருக்குத் திடீரென பட வாய்ப்புகள் குறைந்தன. அவர் ஓவர் வெயிட்டாக இருந்ததுதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை லட்சுமி மேனன், கடந்த சில மாதங்களுக்கு முன் பரதநாட்டியம் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இது வைரலானது. இந்நிலையில் இப்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஒல்லி பெல்லியாக

ஒல்லி பெல்லியாக

இதில் அவர் ஆளே மாறியிருக்கிறார். ஒல்லி பெல்லியாக மாறி, பள்ளி மாணவி போல இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த புகைப்படங்களை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரசித்துள்ளனர். ஏராளமானவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இதை நம்ப முடியாத மாற்றம் என்று சில ரசிகர்கள் கூறியுள்ளனர்.

நல்லாருக்கேன் தம்பி

நல்லாருக்கேன் தம்பி

ஒரு நெட்டிசன், எப்படி இவ்ளோ ஸ்லிம்மா மாறுனீங்க? என்று கேட்டுள்ளார். அடுத்தாப்ல எப்ப படங்கள்ல பார்க்க முடியும்னு சொல்லுங்க? என்று சிலர் கேட்டுள்ளனர். ஒருவர் எப்படி இருக்கீங்க அக்கா என்று கேட்க, நல்லாருக்கேன் தம்பி என்று பதிலளித்திருக்கிறார் லட்சுமி மேனன். எவ்வளவு ஹீரோயின் இருந்தாலும் லட்சுமி மேனன் மாதிரி வருமா? என்று சிலர் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X