வதந்திய நிறுத்துங்கப்பா.. பிக்பாஸ்ல நான் இல்லை.. டாய்லெட்லாம் கழுவ முடியாது.. பிரபல நடிகை கிர்ர்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவில்லை, என்னால் தட்டுகள் மற்றும் மற்றவர்களின் கழிவறையை சுத்தம் செய்ய முடியாது என்று பிரபல நடிகை மீண்டும் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் 4 ஆம் தேதி விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது.
பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது.

பிரமாண்ட அரங்கம்
தொலைத்தொடர்பு, இன்டர்நெட், டிவி என தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாமல், 100 நாட்கள் இந்த வீட்டில் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. இதற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.

கமல்ஹாசன்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4-க்காக வெளியிடப்பட்ட கமல்ஹாசனின் அட்டகாசமான புரமோ வீடியோ வைரல் ஆனது. அவரது லுக்கும் ஸ்டைலும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் பிக் பாஸ் 4 வீட்டுக்கு வருகிறவர்கள் பற்றி நித்தம் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.

ரம்யா பாண்டியன்
இந்த சீசனில் நடிகைகள் சஞ்சனா சிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன், ரியோ ராஜ், விஜே அர்ச்சனா, ரம்யா பாண்டியன் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகை வசுந்தரா தாஸ் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியானது.

லட்சுமி மேனன்
இதற்கிடையே நடிகை லட்சுமி மேனனும் இதில் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. கும்கி, சுந்தரப்பாண்டியன், குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, வேதாளம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்திருந்தார்.

டாய்லெட் கிளீன்
இதை அவர் ஏற்கனவே மறுத்திருந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அங்கு நான் தட்டுகளை கழுவவும் மற்றவர்களின் கழிவறையை சுத்தம் செய்யவும் செல்லப் போவதில்லை.
Recommended Video

நம்புகிறேன்
நிகழ்ச்சி என்ற பெயரில் கேமரா முன்னால் நின்று சண்டை போடவும் போவதில்லை. இதற்கு பிறகாவது நான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக வரும் தகவல்களை, நிறுத்துவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு நடிகை லட்சுமி மேனன் கூறியுள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ் அவரை திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











