அது வதந்தியாம்ல.. 'பிக் பாஸ் ' நிகழ்ச்சியில் இவர் இல்லையாம்.. அவசரமாக மறுத்த பிரபல நடிகை!

By

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்கவில்லை என்று பிரபல நடிகை திடீரென மறுத்துள்ளார்.

பிக் பாஸ் ஜூரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.

நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

போட்டி விதி

போட்டி விதி

அக்டோபர் 4 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. தொலைத்தொடர்பு, இன்டர்நெட், டிவி என தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாமல், 100 நாள்கள் இந்த வீட்டில் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி.

பிரமாண்ட அரங்கம்

பிரமாண்ட அரங்கம்

இதற்காக சென்னையை அடுத்த பூந்தமல்லியில் பிரமாண்ட அரங்கம் அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. பிக் பாஸ் தமிழ் சீசன் 4-க்காக வெளியிடப்பட்ட கமல்ஹாசனின் அட்டகாசமான புரமோ வீடியோ வைரல் ஆனது. அவரது லுக்கும் ஸ்டைலும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

விஜே அர்ச்சனா

விஜே அர்ச்சனா

இந்நிலையில் பிக் பாஸ் 4 வீட்டுக்கு வருகிறவர்கள் பற்றி நித்தம் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்த சீசனில் நடிகைகள் சஞ்சனா சிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன், ரியோ ராஜ், விஜே அர்ச்சனா, ரம்யா பாண்டியன் உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

வசுந்தரா தாஸ்

வசுந்தரா தாஸ்

சமீபத்தில் நடிகை வசுந்தரா தாஸ் பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இதில் பங்கேற்க, பலருக்கு கோடி கணக்கில் பேசப்படுவதாகவும் சிலர் அதிகமாகக் கேட்டதால் இந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது எந்தளவுக்கு உண்மையோ தெரியாது.

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

கொரோனா பிரச்னை காரணமாக, கடந்த 3 சீசன்களில் வெளியானதை விட பல மாற்றங்கள் இந்த சீசனில் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே நடிகை லட்சுமி மேனனும் இதில் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. கோலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் அவரும் ஒருவர்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

கும்கி, சுந்தரப்பாண்டியன், குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, வேதாளம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்திருந்தார். இப்போது பிரபுதேவாவுடன் யங் மங் ஜங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் பங்கேற்பதாக வந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.

Recommended Video

Master Loskesh Kanagaraj கொடுத்த Update • Thalapathy Vijay
புகைப்படங்கள்

புகைப்படங்கள்

நடிகை லட்சுமி மேனன் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் எடையை குறைத்து வெளியிட்டிருந்த புகைப்படங்கள் வைரலாயின. நம்ப முடியாத அளவுக்கு ஆளே மாறியிருந்தார். இதில் பங்கேற்பதற்காகத்தான் அவர் இப்படி உடல் எடையை குறைத்து ஒல்லி பெல்லியாகி இருந்தார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது மறுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X