அம்பிகா, ராதாவின் கலவை லட்சுமி மேனன்!- பிரபு

நாகர்கோயிலில் நடந்த கும்கி படத்தின் 125வது நாள் விழாவில் இயக்குநர் பிரபு சாலமன், இசையமைப்பாளர் இமான், இயக்குநர் லிங்குசாமி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ஹீரோ விக்ரம் பிரபு, நடிகை லட்சுமி மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பிரபு பேசுகையில், "கும்கி படத்தில் பணியாற்றிய குழு சிறந்த குழு. என் மகனின் 2 - வது படத்தையும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் கதாநாயகி லட்சுமிமேனனை எனக்கு மிகவும் பிடிக்கும். நடிகைகள் அம்பிகா, ராதா, ரேவதி ஆகியோர் ஒன்று சேர்ந்த கலவை அவர். கும்கி படத்தில் அத்தனை கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றினர். அதனால்தான் இந்த வெற்றி கிடைத்தது.
நடிகர் திலகத்துக்கு குமரி மாவட்டத்தின் மீது அதீத அன்பு உண்டு. அவர் குமரி மாவட்டத்தில் போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருப்பார். அவரிடம் காட்டிய அதே அன்பை ரசிகர்கள் என்னிடம் காட்டுவதால் அதற்கு நான் அடிமை ஆகிவிட்டேன்," என்றார்.
படத்தின் கதாநாயகன் விக்ரம் பிரபு பேசுகையில், "நான் கொடுத்து வைத்தவன். இந்த படத்தின் இசை கலக்கலாக அமைந்துள்ளது. இதைப்போல வெற்றி படங்களை தொடர்ந்து தருவேன்" என்றார்.
நடிகை லட்சுமிமேனன் பேசுகையில், "என் பாட்டி சிவாஜிகணேசன் ரசிகை. நான் அவருடைய பேரனுடன் நடிப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
விழாவில் படக்குழுவினருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











