நான் எப்பவுமே சிங்கிள் கிடையாது... எனக்கு பாய்ப்ரெண்ட் இருக்காரு... மனம்திறந்த லஷ்மி மேனன்
கொச்சி : தன்னுடைய கேரியரை சிறப்பாக துவங்கிய நடிகை லஷ்மி மேனன் இடையில் இடைவெளி எடுத்துக் கொண்டு தன்னுடைய கல்லூரி படிப்பை மேற்கொண்டார்.
தற்போது மீண்டும் நடிக்க திரும்பி வந்துள்ளார். சமீபத்தில் புலிக்குத்தி பாண்டி என்ற டிவி திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.
இந்நிலையில் தான் எப்போதுமே சிங்கிள் கிடையாது என்று தன்னுடைய மனம் திறந்து தெரிவித்துள்ளார்.

சிறப்பான துவக்கம்
இளம் வயதாக இருந்தபோதே தன்னுடைய சினிமா கேரியரை துவக்கினார் லஷ்மி மேனன். கோலிவுட்டில் இவர் நடிப்பில் வெளிவந்த முதல் இரண்டு படங்களான சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி ஆகிய படங்களுக்கு பிலிம்பேர் விருதுகளை அள்ளினார்.

இடையில் இடைவெளி
தொடர்ந்து இவர் நடித்த குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் மற்றும் ரெக்க ஆகிய படங்கள் இவருக்கு சிறப்பான பெயரை வாங்கிக் கொடுத்த நிலையில், கடந்த 2017ல் நடிப்பில் சிறிது இடைவெளி எடுத்த அவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை மேற்கொள்ள சென்றுவிட்டார்.

வித்தியாசமான நடிப்பு
தற்போது மீண்டும் நடிக்க கிளம்பிவந்துள்ளார். விக்ரம் பிரபு ஜோடியாக இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த புலிக்குத்தி பாண்டி என்ற டிவி படம் மீண்டும் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. முத்தையா இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் லஷ்மி மேனன்.

ஒப்புகொண்ட லஷ்மி மேனன்
இதனிடையே, சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் பேசிய லஷ்மி மேனன், அவரது நீண்டகால காதலர் குறித்த கேள்விக்கு ஆமாம் என்று அவர் பதிலளித்துள்ளார். மேலும் மற்றொரு ரசிகரின் இதேபோன்ற கேள்விக்கு தான் எப்போதுமே சிங்கிள் கிடையாது என்றும் அவர் பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications











