உதயநிதிக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்!

By Shankar

கோடம்பாக்கத்தின் மோஸ்ட் வான்ட்டட் அதிர்ஷ்ட நாயகியான லட்சுமி மேனன், அடுத்து ஜோடி சேரப் போவது உதயநிதி ஸ்டாலினுடன்.

இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து உதயநிதி நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஏ.ஜெகதீஷ் இயக்கி வருகிறார்.

இரண்டு படங்கள்

இரண்டு படங்கள்

இந்தப் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார் உதயநிதி. அதில் ஒரு படத்தில்தான் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் லட்சுமிமேனன். இந்த படத்தை இது கதிர்வேலன் காதல் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனே இயக்குகிறார்.

அனிருத்

அனிருத்

இந்த படத்துக்கு இசை உதயநிதியின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் அல்ல. இந்தப் படத்தில் அனிருத்துக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்களாம்.

சந்தானம்

சந்தானம்

யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் படத்தில் சந்தானம் இருக்கிறாராம். உதயநிதியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

வெளிப்படங்களிலும்...

வெளிப்படங்களிலும்...

தொடர்ந்து சொந்தப் படங்களில் மட்டும்தான் நடிப்பாரா உதயநிதி?

"அப்படியில்லை. கதை, டெக்னீஷியன்கள் என அனைத்தும் எனக்கேற்பட அமைந்தால் வெளிப்படங்களிலும் நடிப்பேன்," என்கிறார் உதயநிதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X