தனுஷ் ஜோடியாம்: லட்சுமி மேனனுக்கு அடித்தது ஜாக்பாட்

By Siva

Recommended Video

தனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடி லட்சுமி மேனன்... வீடியோ

சென்னை: தனுஷின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு லட்சுமி மேனனுக்கு கிடைத்துள்ளது.

கும்கி படம் மூலம் கோலிவுட் வந்த லட்சுமி மேனன் மடமடவென்று வளர்ச்சி அடைந்தார். ஆனால் தற்போது அவரின் மார்க்கெட் நிலவரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இந்நிலையில் தான் அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

தனுஷ்

தனுஷ்

விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். அவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த புதிய கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தற்போதே பலருக்கும் வந்துவிட்டது.

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

ராம்குமார் தனுஷை வைத்து இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனனை நடிக்க வைக்க உள்ளாராம். இடையில் வெயிட் போட்டு குண்டாக இருந்த லட்சுமி மேனன் ஜிம்மில் கடுமையாக ஒர்க்அவுட் செய்ததுடன், உணவுக் கட்டுப்பாட்டிலும் இருந்து எடையை வெகுவாக குறைத்துள்ளாராம். எடையை குறைத்த வேகத்தில் அவருக்கு பெரிய பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

காமெடி

காமெடி

தனுஷை வைத்து இயக்கும் படம் ஃபேன்டசி சப்ஜெக்ட் கொண்டதாம். மேலும் அதில் காமெடிக்கும் குறைவே இருக்காதாம். தனுஷின் கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்குமாம். தனுஷுக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பெரிய விஷயம் இல்லை என்று ராம்குமார் தெரிவித்துள்ளார்.

வடசென்னை

வடசென்னை


3 ஆண்டுகளாக காத்திருந்த வட சென்னை படம் ரிலீஸாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் தனுஷ். படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் தனுஷின் நடிப்பை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அடுத்த வெற்றிப் படத்தை கொடுக்க தயாராகிவிட்டார் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X