'நான் சிங்கிள் இல்லை..' ரசிகர்களிடம் உண்மை சொன்ன நடிகை லட்சுமி மேனன்.. தொழிலதிபரை காதலிக்கிறாரா?

By

சென்னை: தான் சிங்கிளாக இல்லை என்று கூறியுள்ள நடிகை லட்சுமி மேனன், தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார், லட்சுமி மேனன். சில படங்களில் பாடலும் பாடியுள்ளார்.

மலையாளத்தில் அறிமுகமானாலும் தமிழில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

விக்ரம்பிரபு ஜோடியாக

விக்ரம்பிரபு ஜோடியாக

தமிழில், சுந்தரப்பாண்டியன், கும்கி, குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, வேதாளம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்திருந்தார். பிரபுதேவாவுடன் யங் மங் ஜங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்போது முத்தையா இயக்கும் பேச்சி படத்தில் விக்ரம்பிரபுவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஆவேச மறுப்பு

ஆவேச மறுப்பு

இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி மேனன் அடிக்கடி தனது புகைப்படங்களை, பதிவிட்டு வருகிறார். இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகி வந்தது. அதை ஆவேசமாக அவர் மறுத்திருந்தார்.

கழிவறை சுத்தம்

கழிவறை சுத்தம்

அதில் அவர் கூறும்போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அங்கு நான் தட்டுகளை கழுவவும் மற்றவர்களின் கழிவறையை சுத்தம் செய்யவும் செல்லப் போவதில்லை. நிகழ்ச்சி என்ற பெயரில் கேமரா முன்னால் நின்று சண்டை போடவும் போவதில்லை என்று கூறியிருந்தார்.

விலகிவிடுங்கள்

விலகிவிடுங்கள்

இந்நிலையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் சமீபத்தில் பதிலளித்தார். ஒருவர், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். யாரையாவது திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கையை ஆரம்பியுங்கள். சினிமாவை விட்டு விலகிவிடுங்கள் என்று பதிவிட்டு இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

சிங்கிளாவா இருக்கீங்க?

சிங்கிளாவா இருக்கீங்க?

இந்நிலையில் ஒரு ரசிகர், நீங்கள் யாரையும் காதலிக்காமல் சிங்கிளாகவா இருக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர், 'நான் தனியாக இல்லை' என்றார். இதையடுத்து அவர் காதலில் விழுந்து இருப்பதாகவும், யாரையோ காதலித்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

தொழில் அதிபர்

தொழில் அதிபர்

யார் அவர் என்று ரசிகர்கள் மூளையை கசக்கி வருகின்றனர். நடிகை லட்சுமி மேனன், கேரளாவில் தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Recommended Video

Lakshmi Menon Bold Reply about her Marriage | Bigg Boss 4 Tamil
தனுஷை பிடிக்கும்

தனுஷை பிடிக்கும்

மற்ற கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், தான் நடித்த படங்களில் ஜிகர்த்தண்டா தனக்கு பிடித்த படம் என்றும், தமிழில் தனக்குப் பிடித்த நடிகர் தனுஷ் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உடலை எப்படி குறைத்தீர்கள் என்ற கேள்விக்கு, நடனம் அதற்கு உதவியது என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X