சர்ச்சையான சண்டக்காரி.. ரிலீஸ் ஆகாத ரீமேக் படத்திற்கு 3 விருதா? கடுப்பான கர்ணன் பட நடிகை!

சென்னை: தியேட்டர், ஓடிடியில் வெளியாகாத திரைப்படத்திற்கு மூன்று மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து கர்ணன் பட நடிகை ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழக அரசு மாநில விருதுகளுக்கான பட்டியல் அண்மையில் வெளியானது. இதில் 2016 - 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் வெளியான திரைப்படங்களுக்கான சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட பல பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த விருது அறிவிப்பு சிலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் பெரும்பாலானோரை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

சண்டக்காரி: நடிகர்கள் விமல், ஸ்ரேயா நடிப்பில் உருவான 'சண்டக்காரி' என்கிற திரைப்படத்திற்கு 2020 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது சிறந்த திரைப்படம், சிறந்த பாடகர், சிறந்த கலை இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது திரைத்துறையினர், நடிகர்,நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதற்கு காரணம், சண்டக்காரி படம் மலையாளத்தில் உருவான, 'மை பாஸ்' என்கிற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படமாகும். பொதுவாக ரீமேக் படத்திற்கு மாநில விருது வழங்கப்படாது. அது மட்டுமில்லாமல் சண்டக்காரி இன்னும் திரையரங்குகளிலோ,ஓடிடியிலோ வெளியாகவே இல்லை. அப்படி இருக்கும் போது, எப்படி அந்த படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டது என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

state awards tamilnadu award Sandakari

தயவு செய்து விளக்குங்கள்: இதுகுறித்து கர்ணன் பட நடிகை லட்சுமி பிரியா சந்திரமெளலி, ஒரே ஆண்டில் வெளியான இரண்டு படங்கள் தேசிய விருதுகளை வென்ற போதிலும், மாநில விருதுகள் எதையும் பெறவில்லை. 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் 3 தேசிய விருதுகளையும், 'மண்டேலா' திரைப்படம் 2 விருதுகளையும் வென்றன. இந்த இரண்டு இரண்டுமே 2020 ஆம் ஆண்ட வெளியானவை, ஆனால் மாநில விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதை நான் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன். தயவுசெய்து விளக்குங்கள் என பதிவிட்டுள்ளார்.

பா ரஞ்சித்: அதே போல பா ரஞ்சித்தும், இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா என கேள்வி எழுப்பி இருந்தார். 2021ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த ஆர்யா மற்றும் பசுபதிக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அந்த படம் சிறந்த படமாகவோ அல்லது அந்த படத்தை இயக்கிய பா.ரஞ்சித்திற்கு சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்படவில்லை. அதே வேளையில், அந்தாண்டு வெளியான 'ஜெய் பீம்' சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளது. அந்த படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேலுக்கு சிறந்த இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: award விருது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X