பல ஆண்டுகளாக யாருமே ஏன் கண்டுக்கல.. பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி விவகாரம்.. கர்ணன் நடிகை ஆவேசம்
சென்னை: கண்ணுக்கு தெரியாத கொரோனாவை விட கண்ணுக்கு தெரிந்த சில கயவர்கள் மிகவும் மோசமானவர்கள்.
Recommended Video
பெரிய பள்ளிக்கூடம் என நம்பி பல ஆயிரங்கள் (லட்சங்கள் கூட) செலவு செய்து படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு பேரிடியாக பள்ளியில் நடக்கும் இது போன்ற பாலியல் ரீதியான தொல்லைகள் பேரதிர்ச்சியை கொடுக்கின்றன.
சென்னை கே.கே. நகரில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியின் காமர்ஸ் ஆசிரியர் ராஜகோபாலனையும் பள்ளி நிர்வாகத்தையும் கண்டித்து கர்ணன் பட நடிகை லக்ஷ்மி பிரியா சந்திரமெளலி ட்வீட் போட்டுள்ளார்.

பாலியல் தொல்லை
சென்னை கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் பல ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளத்தில் மாணவிகள் எழுப்பிய புகார் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை கிளப்பி உள்ளது. மேலும், வணிகவியல் ஆசிரியர் ஒருவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்துள்ளன.

தியேட்டருக்கு வா
மாணவிகளை தியேட்டருக்கு வா.. படம் பார்க்க போகலாம் என்றும், நள்ளிரவில் வீடியோ கால் சாட் செய்வது, ஆன்லைன் வகுப்புக்கான வாட்ஸ் அப் க்ரூப்பில் ஆபாச பட வீடியோ லிங்குகளை அனுப்புவது, அரை நிர்வாணமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு வருவது என ஏகப்பட்ட பாலியல் ரீதியான அட்டகாசங்களை அந்த ஆசிரியர் நடத்தி உள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குவியும் கண்டனங்கள்
திமுக எம்.பி. கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்த ஆசிரியரின் மோசமான செயலை கண்டிக்காமல் விட்டதற்காக பள்ளி நிர்வாகத்தை கண்டித்து வருகின்றனர்.

கர்ணன் நடிகை
லக்ஷ்மி எனும் குறும்படம் மூலம் பரபரப்பை கிளப்பிய நடிகை லக்ஷ்மி பிரியா சமீபத்தில் வெளியான தனுஷின் கர்ணன் திரைப்படத்திலும் அவருக்கு சகோதரியாக நடித்திருந்தார். இந்நிலையில், PSBB பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் ராஜகோபாலனை கண்டித்துள்ளார் லக்ஷ்மி பிரியா.

ஆக்ஷன் எடுக்கணும்
அந்த பள்ளியில் இருந்து வெளியேறிய ஏகப்பட்ட முன்னாள் மாணவிகளும் பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் நிலையில், பல ஆண்டுகளாக அந்த பள்ளியில் நடைபெறும் பாலியல் குற்றச்சாட்டுக்களை அதன் நிர்வாகம் எப்படி கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்தது என கேள்வி எழுப்பியுள்ள லக்ஷ்மி பிரியா, ஆசிரியர் ராஜகோபாலன் மீதும் அந்த பள்ளியின் மீதும் கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications