கமலா ஹாரிஸ் தாத்தாவும் எங்க தாத்தாவும் சொந்தமாக்கும்.. பிரபல தமிழ் நடிகை கலாய் ட்வீட்!

By

சென்னை: அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் குறித்து பிரபல நடிகை கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

Recommended Video

Kamala Harris சென்னை பெண் America Vice President | Oneindia Tamil

அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.

 கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்

ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். இந்தக் கட்சி சார்பில், அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தபோது, கட்சிக்குள் ஜோ பிடனுக்கு எதிராக போட்டியிட்டவர் கமலா ஹாரிஸ். ஆனால், தன்னால் பிரசாரம் செய்ய முடிய வில்லை, நிதி திரட்டமுடியவில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாபஸ் பெற்றார்.

அதிபர் ட்ரம்ப்

அதிபர் ட்ரம்ப்

இந்நிலையில், அதிபர் வேட்பாளருக்குத் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கமலா ஹாரிஸையே துணை அதிபர் வேட்பாளராக, ஜோ பிடன் தேர்வு செய்துள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது. கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இன வெறிக்கு எதிராகவும் கமலா ஹாரிஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதிபர் ட்ரம்ப்பையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

அமெரிக்க இந்தியர்கள்

அமெரிக்க இந்தியர்கள்

இது, அமெரிக்க மக்களிடையே கமலா ஹாரிஸுக்கு ஆதரவை அதிகப்படுத்தி இருக்கிறது. துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸைத் தேர்வு செய்துள்ளதை அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் ஆதரித்துள்ளனர். இதனால் ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் சென்னையை பூர்விகமாகக் கொண்டவர்.

லட்சுமி பிரியா

லட்சுமி பிரியா

அவரது உறவினர்கள் இப்போதும் இங்கும் உள்ளனர். இந்நிலையில் நடிகை லட்சுமி பிரியா, கமலா ஹாரிஸ் தனது உறவினர் என்று கிண்டலாகக் கூறியுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், கமலா ஹாரிஸ், அமெரிக்கர் என்று தனது அடையாளத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டு வருகிறார். அவரை ஏன் இந்தியர் என்று நாம் ஏன் அடையாளப்படுத்த வேண்டும்? இது எப்படி உனக்கு தெரியும் என்று கேட்கலாம். அவரது தாத்தாவும் எங்கள் கொள்ளு தாத்தாவும் உறவினர்கள் என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுட்ட கதை

சுட்ட கதை

நடிகை லட்சுமி பிரியா, தமிழில் மகிழ் திருமேனி இயக்கிய முன் தினம் பார்த்தேனே, சுட்டகதை, ஆதியின், யாகாவாராயினும் நாகாக்க, அஸ்வின் சரவணனின் மாயா, நிவின் பாலியின் ரிச்சி, ஓடு ராஜா ஓடு உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த லட்சுமி என்ற குறும்படமும் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது.

More from Filmibeat

Read more about: tamil cinema heroine
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X