ஒன்பதுல குரு... 2 கெட்டப்பில் லட்சுமி ராய்
ஒன்பதுல குரு படத்தில் 2 விதமான கெட்டப்பில் வருகிறாராம் கவர்ச்சி நாயகி லட்சுமி ராய்.

படம் இல்லை... ஆனா இருக்கு...
லட்சுமி ராய் மாதிரி ஒரு வித்தியாசமான நடிகையைப் பார்க்க முடியாது. படமே இல்லை என்ற ரேஞ்சில் இருந்தாலும் கூட அவர் நடிப்பதாக பல படங்களின் ட்டியல் அவ்வப்போது வெளியாகத் தவறுவதில்லை.

ஒன்பதுல குரு
இப்போது ஒன்பதுல குரு என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறாராம் லட்சுமி ராய். இப்படத்தை இயக்குவது பி.டி.செல்வக்குமார்.

2 விதமான கெட்டப்பாம்
இப்படத்தில் 2 விதமான கெட்டப்பில் வருகிறாராம் லட்சுமி ராய். படம் இளைஞர்களைக் குறி வைத்த கதை என்பதால் லட்சுமி ராயை எப்படி போர்ட்ராய்ட் செய்வார்கள் என்பதை விளக்கிச் சொல்லத் தேவையில்லை.

மறுபடியும் மந்த்ரா
இப்படத்தில் பழைய நடிகை மந்த்ராவும் நடிக்கிறாராம். இவருக்கு இதில் வித்தியாசமான வேடமாம். அவரது கேரக்டர் குறித்து இயக்குநர் சொன்னதுமே ரீ என்ட்ரிக்கு சரியான படம் என்று கூறி ஏற்றுக் கொண்டாராம் மந்த்ரா.
Comments


Click it and Unblock the Notifications