நான் பேசியிருக்கக் கூடாது.. வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.. டிவிட்டுகளும் அழிப்பு!

சென்னை: நடிகை வனிதா விஜயகுமாரின் திருமணம் குறித்து பேசியதற்காக நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மன்னிப்பு கோரியுள்ளார்.

Recommended Video

Vanitha விடம் மன்னிப்பு கேட்ட Lakshmi Ramakrishnan, Kutti Padmini

நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த 27ஆம் தேதி தனது காதலரான பீட்டர் பால் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

லிப்லாக் முத்தம், கேக் கட்டிங் என களைக்கட்டியது அவரது திருமணம். அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார் வனிதார்.

முதல் மனைவி

முதல் மனைவி

அவற்றை பார்த்து சிலர் வாழ்த்து சொன்ன போதும் பெரும்பாலான மக்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். இதனை தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவி தனது கணவர் தன்னை முறைப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்தார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

இதனையறிந்த நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகை வனிதா வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்துவிட்டார். அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அவர் எப்படி சட்டப்படி விவாகரத்து செய்யாத ஒருவரை திருமணம் செய்தார் என கேள்வி எழுப்பினார்.

வனிதா காட்டம்

வனிதா காட்டம்

இதனை பார்த்து டென்ஷனான வனிதா, பாலியல் வன்கொடுமை, தற்கொலையை பற்றி மட்டும் பேசும் உங்கள் வேலையை பாருங்கள். அடுத்தவர் குடும்ப பிரச்சினைகளை அவர்களின் அனுமதியின்றி விவாதிப்பதை நிறுத்துங்கள். இது ஒன்றும் உங்கள் டிவி நிகழ்ச்சியல்ல என காட்டமாக டிவிட்டினார்.

விவாதம்

விவாதம்

இதனை தொடர்ந்து பலரும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்க தொடங்கினர். மீடியாக்களிலும் வனிதாவுக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கும் மோதல் என செய்திகள் வெளியான. இதனை தொடர்ந்து சண்டையெல்லாம் ஒன்றும் இல்லை என்று விளக்கமளித்தார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

மன்னித்துவிடுங்கள்

மன்னித்துவிடுங்கள்

இந்நிலையில் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதா குறித்து தான் பதிவிட்ட டிவிட்டுகளை எல்லாம் நீக்கியுள்ளார். மேலும் வனிதாவிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், என்னை மன்னித்துவிடுங்கள் வனிதா. நான் கருத்து தெரிவித்திருக்கக்கூடாது.

கடமையை செய்வேன்

கடமையை செய்வேன்

அதனை ஒரு தெரு சண்டை போல தோற்றம் கொடுத்த மீடியாக்களுக்கும் நன்றி. உங்களைப் பற்றிய அனைத்து ட்வீட்களையும் நீக்கிவிட்டேன். நீங்கள் சொன்னது போல், ஏழை குழந்தை பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் எழுப்புவதற்கான எனது அசல் ‘கடமையை' செய்வேன் என தெரிவித்துள்ளார்.

பேச விரும்பவில்லை

பேச விரும்பவில்லை

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் இந்த டிவிட்டை பார்த்த பலரும் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் பேசியது எல்லாம் சரிதான் உங்களுடைய கருத்துக்களும் சரிதான் என தெரிவித்து வருகின்றனர். ஆனபோதும் இந்த டாப்பிக் குறித்து தான் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X