விவாதம் பண்ணலாம் வர்றீங்களா? அமலா பாலுக்கு அழைப்பு விடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
Recommended Video
சென்னை: ஆடை படம் தொடர்பாக விவாதம் நடத்த தயாரா என நடிகை அமலா பாலுக்கும் இயக்குநர் ரத்னகுமாரும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் நடிப்பில் உருவான படம் ஆடை. இந்தப்படம் பல தடைகளுக்குப் பிறகு கடந்த வெள்ளிக்கிழமை இரவு மற்றும் சனிக்கிழமை ரிலீஸானது.
இந்தப் படத்தில் நடிகை அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ளார். இதனால் படத்திற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஒரு சிலர் தமிழ் சினிமாவில் முதன் முறையாக உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் நடித்த அமலா பாலின் துணிச்சலை பலர் பாராட்டினர்.

ட்ரென்ட் மாறிவிட்டது
படம் ரிலீஸாவதற்கு முன்பு படம் குறித்தும் நடிகை அமலா பால் குறித்தும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் படம் ரிலீஸான பிறகு அப்படியே ட்ரென்ட் மாறியது.

நல்ல கருத்துக்கள்
நடிகை அமலா பாலுக்கு படத்தை பார்த்தவர்களும் ரசிகர்களும் பாராட்டு தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் படம் குறித்து நல்ல கருத்துக்களே பதிவாகி வருகின்றன.

விவாதம் பண்ணலாமா?
ஆடை படம் அமலா பாலின் திரைப்பயணத்தில் நிச்சயம் ஒரு மைல் ஸ்டோனாக இருக்கும் என கூறப்படுகிறது. ஆடை படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை அமலா பாலையும் இயக்குநர் ரத்னகுமாரையும் விவாதத்திற்கு அழைத்துள்ளார்.
ஒவ்வொரு ஃபிரேமிலும்
இதுதொடர்பாக அவர் அமலா பாலுக்கு பதிவிட்டுள்ள டிவிட்டில் ஹாய் டியர், ஆடை படத்தை பார்த்தேன் வாழ்த்துகள். ஒவ்வொரு ஃபிரேமிலும் உங்களின் கடின உழைப்பு தெரிகிறது.

சில கேள்விகள் உள்ளன
நீங்கள் ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா? உங்களுக்கும் இயக்குநருக்கும் சில கேள்விகள் உள்ளன. திரைப்பட இயக்குநராகவோ அல்லது நடிகராகவோ அல்ல, சாதாரண பார்வையாளராகவும், ஒரு பெண்ணாகவும், பெண் குழந்தைதைகளின் தாயாகவும்தான் என பதிவிட்டுள்ளார்.

சில படங்களை இயக்கியுள்ளார்
லட்சுமி ராமகிருஷ்ணன் பல படங்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











