"என்னை கிண்டல் பண்ணியிருந்தாலும்..." - 'அருவி' படம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன்

By Vignesh Selvaraj

Recommended Video

அருவி பெண்களுக்கான நிகழ்ச்சியை கிண்டல் செய்துள்ளனர் - லக்ஷ்மி ராமகிருஷ்ணன்- வீடியோ

சென்னை : சமீபத்தில் வெளிவந்து பரவலான வரவேற்பை பெற்றிருக்கும் படம் 'அருவி'. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

அதிதி பாலன் நாயகியாக நடித்திருந்த இந்தப் படத்தில் கவிதா பாரதி, லட்சுமி கோபால்சாமி, அஞ்சலி வரதன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது.

சொல்வதெல்லாம் உண்மை

சொல்வதெல்லாம் உண்மை

'அருவி' படம் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை கடுமையாக விமர்சனமும் செய்தது. குறிப்பாக அந்த நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணனை இமிடேட் செய்து மலையாள நடிகை லட்சுமி கோபால்சாமி நடித்திருந்தார்.

சொல்வதெல்லாம் சத்தியம்

சொல்வதெல்லாம் சத்தியம்

டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகவும், விளம்பரத்திற்காகவும், வேண்டுமென்றே அழ வைப்பது, பாதிக்கப்பட்டவர்களை கோபப்படுத்தி சண்டையை ஏற்படுத்துவது என இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க சுயநலத்திற்காக செயல்படுவது போல காட்டப்பட்டிருந்தது.

லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

இந்தப் படம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். படம் பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன், எனது நிகழ்ச்சியையும், என்னையும் கிண்டல் செய்தாலும் அருவி நல்ல படம் என்று கூறியுள்ளார்.

அற்புதமான படம்

அற்புதமான படம்

அவர் மேலும் கூறியிருப்பதாவது, "பல மாதங்களுக்கு முன் தணிக்கை ஆன போது இந்த படம் பற்றி தெரிந்து கொண்டேன். படம் பார்த்தவர்கள், இது அற்புதமான படம். தயவு செய்து எதுவும் எதிர்வினையாற்ற வேண்டாம் என்றார்கள். நல்ல இயக்குநர், நிகழ்ச்சிப் பின்னணியில் நல்ல படத்தை எடுத்துள்ளார்.

நிகழ்ச்சியை கிண்டல்

நிகழ்ச்சியை கிண்டல்

பெண்ணியப் படமாக எடுத்திருந்தாலும், அடக்குமுறைக்கு, அநீதிக்கு ஆளான பெண்களுக்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நிகழ்ச்சியை அவர் கிண்டல் செய்துள்ளார்" என்று தெரிவித்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X