twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2 மாத குழந்தைக்கு பாலியல் கொடுமை.. கொடூர தந்தை.. வச்சு விளாசிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

    |

    சென்னை: 2 மாதங்களே ஆன பெண் குழந்தையை சொந்த தந்தையே பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவத்துக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மங்கையராய் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும் என்பது எல்லாம் வாசகத்துக்கு வேண்டுமானால் நல்லா இருக்கும்.

    ஆனால், நிஜ வாழ்க்கையில், ஒரு பெண் பருவம் அடைந்த பிறகு அல்ல, பெண் குழந்தை பிறந்தவுடனே இதுபோன்ற பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது எந்த மாதிரியான சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்ற கேள்வியையே எழுப்புகிறது.

    பாய்ஸ் லாக்கர் ரூம்

    பாய்ஸ் லாக்கர் ரூம்

    பள்ளி பருவத்திலேயே மாணவிகளை எப்படி பலாத்காரம் செய்யலாம் என சக மாணவர்கள் சாட் செய்யும் பாய்ஸ் லாக்கர் ரூம் சமீபத்தில் அம்பலமாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த மாணவர்கள் பள்ளியில் என்ன கல்வியை கற்கின்றனர் என்ற சந்தேகமே பலருக்கு எழுந்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் சமூக மாற்றம் தான் என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

    குழந்தை கடத்தல்

    குழந்தை கடத்தல்

    பெண் குழந்தைகளை கடத்தும் சம்பவம் நாட்டில் பெருகிக் கொண்டே போகிறது. பெண் குழந்தைகளை கடத்தி அவர்களை பாலியல் தொழிலுக்கு பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை அடிக்கடி செய்தித் தாளில் சாதாரண செய்தியாகவோ, ஒரு உச்சுக் கொட்டி லேசா உணர்ச்சி வசப்பட்டோ கடந்து செல்கிறோம்.

    பிஞ்சு குழந்தை

    பிஞ்சு குழந்தை

    இந்நிலையில், சமீபத்தில் ஈரோட்டில் பிறந்து 2 மாதங்களே ஆன பிஞ்சு குழந்தையை கொடூர தந்தையே பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், அந்த குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தம் வந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. சமூக வலைதளத்தில் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

    கலிகாலம் முத்திப்போச்சு

    கலிகாலம் முத்திப்போச்சு

    இந்த கொடூரமான சம்பவம் பற்றி அறிந்த நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், 65 நாட்களே ஆன இளம் பிஞ்சை சொந்த தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தை கேட்டு அதிர்ந்து போனேன். கலிகாலம் முத்திப்போச்சு, என்ன ஒரு கேவலமான செயல் என விளாசித் தள்ளியுள்ளார்.

    ஆபாச வெப்சீரிஸ்

    ஆபாச வெப்சீரிஸ்

    மற்றொரு டிவீட்டில் பிரபல OTT நிறுவனத்தை நேரடியாகவே தாக்கி உள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். முழுக்க முழுக்க ஆபாச வெப்சீரிஸ்களே அந்த OTT தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும், அதிகளவில் இதனாலே இளைஞர்கள் வெப்சீரிஸ்களுக்கு அடிமையாகி வருவதாகவும் சாடியுள்ளார். பெண்கள் குறித்த கல்வியை பசங்களுக்கு போதிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    English summary
    Actress-turned-filmmaker Lakshmy Ramakrishnan, who voices her opinion on various unjust things that happen in society, took to her Twitter account to condemn the shocking act.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X