அபிராமி ஒரு முட்டாள்.. அந்த தப்பை பண்ணியிருக்கவே கூடாது.. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் விளாசல்!
சென்னை: கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக அபிராமி அப்படி பேசியிருக்கவே கூடாது என லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.
பாலியல் வழக்கில் கைதான ஆசிரியருக்கு அபிராமி வெங்கடாசலம் ஆதரவு தெரிவித்து பேசிய கருத்துக்கு பல பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வாய் விட்டு மாட்டிக் கொண்ட அபிராமி: கலாஷேத்ரா மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திய நிலையில், பேராசிரியர் ஹரி பத்மநாபனை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், அந்த ஆசிரியர் எந்த தவறையும் செய்யவில்லை என்றும் கலாஷேத்ரா பெயரைக் கூட சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் பேசுறாங்க என பிக் பாஸ் பிரபலம் அபிராமி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பேட்டி: குட்டி பத்மினி உள்ளிட்ட பல பிரபலங்கள் அபிராமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சந்தித்த நிலையில், டாஸ்மாக் குறித்தும் கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாகவும் அவர் பேசியுள்ளார். அதில், நடிகை அபிராமி குறித்தும் அவர் பேசியது ரொம்பவே தப்பான விஷயம் என்றும் விளாசி உள்ளார்.
அபிராமி ஒரு முட்டாள்: அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அபிராமி பேசியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவ மெச்சூரிட்டியே இல்லாமல் பேசிட்டா, இந்த விஷயத்துக்கு எல்லாம் ப்ரூஃப் வச்சிட்டா மாணவிகள் புகார் கொடுக்க முடியும், அவங்க பேசியது ரொம்பவே முட்டாள்த்தனமானது என விளாசி உள்ளார்.

ரொம்ப ரொம்ப தப்பு: உணர்ச்சிவசப்பட்டு இந்த விவகாரத்தில் அபிராமி வாய்ஸ் அவுட் பண்ணிட்டான்னு தான் நினைக்கிறேன். அவ பேசியது ரொம்ப ரொம்ப தப்பு மாணவிகள் மட்டுமின்றி மாணவர்கள் கூட தங்களுக்கும் அங்கே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக சொல்லி இருக்காங்க, நாம இப்போ பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட பல இடங்களில் இளம் பெண்களும், பெண் குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இதனை சாதி, மத பிரச்சனையாக பார்க்கக் கூடாது. வக்கிர மனநிலைக்கு எதிரான போராகவே இந்த விஷயத்தை பார்க்க வேண்டும் என பேசியுள்ளார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

சரக்கு தரத்தை உயர்த்துங்க: டாஸ்மாக்குகளை மூடுவதை விட்டு விட்டு அங்கே கொடுக்கப்படும் சரக்கின் தரத்தை உயர்த்தலாம். வெளிநாடுகளில் எல்லாம் நல்லா சம்பாதிச்சு செட்டில் ஆனவர்கள், குடும்பத்துடன் அமர்ந்து ஒரு பெக் அல்லது ரெண்டு பெக் அருந்துவது தங்கள் உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்கும் என செய்கின்றனர்.
ஆனால், இங்கே 500 ரூபாய் சம்பளம் வாங்கிட்டு 400 ரூபாயை டாஸ்மாக்கில் கொண்டுப் போய் கொடுத்து குடித்து விட்டு, அவன் உடம்பையும் கெடுத்துக்குறான், குடும்பத்தையும் கெடுக்கிறான் என்றும் பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











