»   »  கெட்ட புத்திக்காரங்களுக்கு கோவில் சிலைகள் கூட செக்ஸியே: ஆர்ஜே பாலாஜி, ஸ்ரீப்ரியாவை விளாசிய நடிகை

கெட்ட புத்திக்காரங்களுக்கு கோவில் சிலைகள் கூட செக்ஸியே: ஆர்ஜே பாலாஜி, ஸ்ரீப்ரியாவை விளாசிய நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கெட்ட புத்தியுடன் பார்ப்பவர்களுக்கு கோவில் சிலைகள் கூட செக்சியாகவே தெரியும் என ஆர்.ஜே. பாலாஜி மற்றும் ஸ்ரீப்ரியாவை ட்விட்டரில் விளாசியுள்ளார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.

கடவுள் இருக்கான் குமாரு சர்ச்சையால் ட்விட்டரில் இருந்து வெளியேறிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தற்போது மீண்டு ட்வீட்டத் துவங்கிவிட்டார். தன்னை விமர்சித்து வரும் நடிகை ஸ்ரீப்ரியாவுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வரவேற்பு

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பார்த்தேன், அது அருமையாக இருந்தது, மீண்டும் ட்விட்டரில் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி என ஒருவர் ட்வீட்டினார். அந்த ட்வீட்டை ஆர்.ஜே. பாலாஜி, ஸ்ரீப்ரியா பார்க்கும்படி ட்வீட்டியுள்ளார் லட்சுமி.

கள்ளத்தொடர்பு

கடந்த நான்கு ஆண்டுகளில் பல நல்ல எபிசோட்கள் நடத்தியுள்ளேன். ஆனால் சிலர் ஏமாற்றுவது மற்றும் கள்ளத்தொடர்புகள் பற்றி மட்டும் தான் பார்க்கிறார்கள்!! @RJ_Balaji @sripriya

ஸ்ரீப்ரியா

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை புகழ்ந்து தள்ளி ஒருவர் போட்ட ட்வீட்டை ஸ்ரீப்ரியாவும், ஆர்.ஜே. பாலாஜியும் பார்க்கும்படி செய்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

கோவில் சிலைகள்

சொல்வதெல்லாம் உண்மை எங்களுக்கு பிடிக்கும், ஆர்.ஜே. பாலாஜி மற்றும் ஸ்ரீப்ரியாவை கண்டுகொள்ளாதீர்கள் என ஒருவர் ட்வீட்டினார். அதற்கு லட்சுமி கூறியிருப்பதாவது, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பார்ப்பவர்களை பொறுத்து தாக்கம் உள்ளது. கெட்ட புத்தியுடன் பார்ப்பவர்களுக்கு கோவில் சிலைகள் கூட செக்சியாகவே தெரியும் என்று கூறியுள்ளார்.

English summary
Actress Lakshmy Ramakrishnan is back with a bang on twitter. She blasted actress Sripriya and RJ Balaji.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil