Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வனிதா, பவர் ஸ்டார் ரொமான்ஸ்… நக்கலடித்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
சென்னை : வனிதா மற்றும் பவர் ஸ்டாரின் ரொமான்ஸ் புகைப்படத்தை பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணன் நக்கலடித்துள்ளார்.
Recommended Video
இதை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்கள், வனிதா போட்டோவுக்கு ஏன் கருத்து சொல்றீங்க என்று கேட்டுக்கொண்டனர்.
மீண்டும் குட்டி பவானியா...த்ரில்லர் கேங்ஸ்டர் படத்தில் ஹீரோவாகிறார் மகேந்திரன்
இதையடுத்து, லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த கமெண்டை நீக்கிவிட்டார்.
பிரபலமானார்
விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் வனிதா விஜயகுமார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
பிரிந்தார்
திடீரென பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்தார். எவ்வளவு பரபரப்பாக அவசரமாக திருமணம் நடைபெற்றதோ அதே வேகத்தில் அவரிடமிருந்த பிரிந்தார் வனிதா விஜயகுமார்.
பவர் ஸ்டாருடன்
பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். திடீரென பவர் ஸ்டாருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இணையத்தை தெறிக்கவிட்டார். 4வதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறி இருந்த நிலையில் இந்த புகைப்படம் தீயாக பரவியது.
பவர் ஸ்டாருடன் ரொமென்ஸ்
வனிதா , பவர் ஸ்டாருடன் பிக்கப் ட்ராப் என்ற படத்தில் நடிக்கிறார் அந்த படத்திற்கான புகைப்படம் என்பது தெரியவந்தது. இதையடுத்து பவர் ஸ்டாருடன் மார்டன் உடையில் கன்னத்தோடு கன்னம் வைத்து ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகின.
நக்கலடித்தார்
இந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர், வனிதா விஜயகுமார் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு டேக் செய்திருந்தார். இதனைப் பார்க்கும்போது மிகவும் காமெடியா இருக்கு நல்லா சிரிச்சேன் என்று பதிவிட்டு, எனக்கு டேக் செய்யாதீர்கள் என ராமகிருஷ்ணன் நக்கலாக கேட்டுள்ளார். இதை பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் எதுக்கு வனிதா போட்டோவுக்கு கருத்து சொல்றீங்க அவங்க தரக்குறைவாக பேசுவாங்க என்று கூறியதை அடுத்து. அந்த கருத்தை சிறிது நேரத்தில் நீக்கிவிட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன்.