'நூறு புருஷன் வேணாலும் வச்சுக்கட்டும், கவலையில்லை' வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பதில்!

By

சென்னை: தன்னை ஆபாசமாக திட்டிய நடிகை வனிதாவுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடியாக பதில் கொடுத்துள்ளார்.

Recommended Video

வீட்டு சண்டை வீதிக்கு வந்தது • Lakshmi யை ஓடவிட்ட வனிதா

முறையாக விவாகரத்து பெறாத பீட்டர் பாலை, நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்திருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகை வனிதா, இப்போது மேலும் பரபரப்பாகி இருக்கிறார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

வனிதாவின் திருமணம் குறித்து நடிகை கஸ்தூரியும், நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் கருத்து தெரிவித்திருந்தனர். இவர்களுக்கும் வனிதாவுக்கும் ஏற்கனவே ஏகப்பட்ட வாக்குவாதங்கள் ட்விட்டரில் வம்பு தும்பாக நடந்திருக்கிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேரலையில் பேச , நடிகை வனிதாவையும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனையும் நேரலையில் பேச வைத்தனர்.

ஹைகோர்ட் ஜட்ஜா?

ஹைகோர்ட் ஜட்ஜா?

இதில் பேசிய நடிகை வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கமாகப் பேசினார். அவர் கூறும்போது, அந்த பொம்பளைக்கு (பீட்டர் பால் மனைவி ஹெலன்) ஷ்யூரிட்டி கொடுக்கறதுக்கு நீங்க யாரு? நீ என்ன ஹைகோர்ட் ஜட்ஜா? லாயரா? நீங்க எதுக்கு இந்த பிரச்னையில தலையிடுறீங்க? அப்புறம் எதுக்கு கோர்ட் ஜட்ஜ், லாயர் இருக்காங்க. டிராமா பண்ணிக்கிட்டு இருக்கியா? என்றார்.

வண்டவாளம் தெரியாதா?

வண்டவாளம் தெரியாதா?

பிறகு ஒரு கட்டத்தில், வாடி போடி என்று அழைக்கத் தொடங்கிய வனிதா, நீ என்ன பத்தினியா? ஒரு புருஷன் இருந்தா, நீ ஒழுங்கா? என் புருஷனை 'ஷிட்'டுன்னு சொல்ற.. உன் புருஷன்தான் ஷிட்.. உன் கூட குடும்பம் நடத்துறானே அந்த கேடுக்கெட்டவன், வெட்கங்கெட்ட ஜென்மம், அவன்தான் ஷிட். உன் வண்டவாளம் தெரியாதா? என்று ஆவேசமானார். இதை நடத்திக் கொண்டிருந்த காம்பயருக்கு வெலவெலத்துவிட்டது.

தன்மையற்ற இவர்கள்

தன்மையற்ற இவர்கள்

இந்நிலையில் ட்விட்டரில் இதுபற்றி விவாதம் மீண்டும் தொடங்கி இருக்கிறது. அதில் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறி இருப்பதாவது: ஒரு பெண்ணுக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும் உதவி செய்ய போய் இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியதாகி விட்டது. தன்மையற்ற இவர்கள் மற்றவர்களையும் தங்களை போன்றே நினைக்கிறார்கள். இதில் இருந்து தப்பிக்க தங்கள் கழிவுகளை மற்றவர்கள் மீது வீசுகிறார்கள்' என்று கூறியுள்ளார்.

ரொமான்ஸ் செய்வதற்கு

ரொமான்ஸ் செய்வதற்கு

மற்றொரு பதிவில், 'நூறு கணவர் வேண்டுமானாலும் அவளுக்கு இருக்கட்டும். கவலையில்லை. ஆனால், வேறொரு பெண்ணின் கணவராக இருக்கக் கூடாது. தனது மனைவி மற்றும் குழந்தைகளை எரிச்சல் அடைய வைப்பதற்காக, கேமரா முன்னால் அவர் (பீட்டர் பால்) ரொமான்ஸ் செய்வதற்கு முன், முறைப்படி விவாகரத்து செய்ய வேண்டும். எந்த ஒழுக்கமான ஆணும் பெண்ணும் இந்த அட்டூழியத்துக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கத்தான் செய்வார்கள்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X