ஹேர்ஸ்டைலை மாற்றி பெரியாரைப் புகழ்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!
நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் புதிய ஹேர்ஸ்டைலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
சென்னை: நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் புதிய ஹேர்ஸ்டைலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதில் பெரியாரைப் புகழ்ந்துள்ளார்.
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன். நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், இயக்குனர் என பல தளங்களில் இயங்கி வருகிறார்.

தென் இந்திய மொழிப்படங்களில் நடித்துவரும் இவர், சமீபத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்போது ஆடுகளம் புகழ் கிஷோர் நடிப்பில் ஹவுஸ் ஓனர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய நீளமான முடியை வெட்டிவிட்டு ஷார்ட் ஹேர் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தை பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல், தன்னுடைய முடியை பராமரிக்க நேரமில்லை, மிக மகிழ்ச்சியோடு வெட்டிவிட்டேன் எனப் பதிவிட்டு, இவை எல்லாமே தேவையில்லாத பேக்கேஜ் என்று பெரியார் மிகச்சரியாகச் சொன்னார் என ட்வீட் செய்துள்ளார்.
நீங்கள் நீளமான கூந்தலோடு பொட்டு வைத்திருக்கும்போது மிக அழகாக இருப்பீர்கள். என்னுடைய ஒன்பது வயது மகளுக்கும் அப்படித்தான் தலை வாரி விடுகிறேன் என ஒரு ரசிகை அதற்கு கமெண்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











