லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஆரோகணம்'- அக் 26 ல் வெளியாகிறது!

லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஆரோகணம்'
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முதல்முதலாக இயக்கியுள்ள ஆரோகணம் திரைப்படம் வரும் அக்டோபர் 26-ம் தேதி வெளியாகிறது.
தமிழில் மிக குணசித்திர நடிகைகளில் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு நடிப்பு தவிர மேலும் பல திறமைகளும் உண்டு.

படத்தை இயக்கிய லட்சுமி....
கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் இப்போது ஆரோகணம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில்
சம்பத், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், உமா பத்மநாபன், ராஜி விஜயசாரதி ஆகியோருடன், புதியவர்களான விரேஷ்,ஜெய் குஹேனி ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.
'ஆரோகணம்' படத்தை ஏவிஏ புரொடக்ஷன் சார்பாக திரு. அனுப் தயாரிக்க, மங்கி கிரியேட்டிவ் லேப் இணைந்து தயாரித்துள்ளது.

கே.பாலசந்தர் பாராட்டு...
இந்தப் படத்தை பிரத்தியேகமாக பார்த்த தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க விமர்சகர்கள் வெகுவாகப் பாராட்டி லட்சுமி ராமகிருஷ்ணனைத் தட்டிக் கொடுத்துள்ளனர். இயக்குனர் கே. பாலச்சந்தர் ஆரோகணம் பற்றி புகழ்ந்து தள்ளிவிட்டார்.
படம் முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டது என்றாலும் ஒரு படத்தை நேரம் பார்த்து ரிலீஸ் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

அக்டோபர் 26ல் வெளியாகிறது!
பெரிய பட்ஜெட் படங்களுக்கு நடுவே வெளியிட்டுவிடாமல் தகுந்த நேரத்துக்கு காத்திருந்த ஜே.எஸ்.கே பிலிம் கார்பொரேசன் தற்போது அக்டோபர் 26ல் உலகமெங்கும் வெளியிடத் தயாராக களமிறங்கி உள்ளது.
‘ரௌத்திரம்' பட புகழ் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, ஆடுகளம் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்க, முகமூடியில் கலக்கிய கே இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











