twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னும் மோகப் பொருளாகத்தானே பெண்களைப் பார்க்கிறார்கள்.. லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதங்கம்

    |

    சென்னை: பச்சிளம் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது என்பது சமீப காலமாக தின இதழ்களின் தவிர்க்கமுடியாத செய்தியாகிவிட்டது. இந்த வன்கொடுமை அவலம் இப்படியே தொடர்ந்தால், தின நாளிதழின் தலைப்பு செய்தியாக மாறும் நிலை வெகுதொலைவில் இல்லை என்பதே நிஜம்.

    இப்படி பெண்களுக்கு எதிராக வன்மத்தைத் தூண்டுவதில், திரைப்படங்களுக்கு அதிகப் பங்கு இருப்பதாக பல்வேறு குற்ற‌ச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

    Lakshmi Ramakrishnan slams male chauvinism

    இந்நிலையில், 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என பல பெண்களின் பிரச்னைகளுக்கு நியாய தராசாக நின்றவரும், சமூக அக்கறையோடு படம் எடுப்பதில் வெற்றிப் படிகளை எட்டி, சமீபத்தில் வெளியான 'ஹவுஸ் ஓனர்' பட வெற்றியில் உற்சாகமாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனின் பொளேர் பதில்

    'இத்தனை வருடகாலமாக திரைப்படங்களில் வரும் பெரும்பாலான காதல் காட்சிகள் தவறான புரிதலோடுதான் காட்சிமைப்படுத்தப்பட்டு வருகிறது. விருப்பமில்லாதப் பெண்ணிடம் காதல் கொண்டு, அவளி பின் தொடர்ந்து பல்வேறு இம்சைக் கொடுப்பதையே, காதலாக காட்டிவந்திருக்கிறார்கள்.

    Lakshmi Ramakrishnan slams male chauvinism

    மோகப் பொருளாக பெண்களை சித்தரிப்பது போன்ற சினிமா காட்சிகளால், சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிக‌ம்.

    ஒரு விஷயத்தை சொல்வதைவிட, அதை சித்தரிக்கப்படும் காட்சிகளாக திரைப்படங்களில் பார்க்கும்போது, இளைஞர்களின் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மிகவும் வலிமை வாய்ந்தது. காதலிக்க மறுத்த பெண்ணின் மீது திராவகம் வீசுவது, அரிவாளால் வெட்டி உயிரைப் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கும் சினிமாவும் ஒரு விதத்தில் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.

    Lakshmi Ramakrishnan slams male chauvinism

    எனவே, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அவசியம் சமூக அக்கறையோடு படம் எடுத்தால்தான் இன்றைய பெண் பிள்ளைகள் எந்தத் துறையிலும் சாதிக்க முடியும். மேலும்,பெண்களின் அவல நிலையை எடுத்துரைக்கும், மீ டூ இயக்கம் உருவானபோது பலரும் அதை கேலிக்குள்ளாக்கிவிட்டார்கள் என்பது எத்தனை பெரிய சோகம்.

    Lakshmi Ramakrishnan slams male chauvinism

    முதலில் ஆண்கள் ஒரு பெண்ணின் அனுமதியின்றி நிர்பந்தப்படுத்துவது தவறு என்பதை உணரவேண்டும். தங்களது சிந்தனைகளையும், புரிதல்களையும் மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

    போற்றி பாடடி பெண்ணே!

    English summary
    Actress and Director Lakshmi Ramakrishnan has fumed that Tamil cinema has not evolved yet and its treating the women as a consumer product.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X