விடமாட்டார் போல.. லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் vs வனிதா.. டிரெண்டாகும் புது ஹாஷ்டேக் #ISupportElizabeth

சென்னை: பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் ஹெலனுக்கு வனிதா விஜயகுமார் துரோகம் செய்து விட்டதாகவும் எலிசபெத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் #ISupportElizabeth மற்றும் #Elizabeth என்ற ஹாஷ்டேக்குகளை லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் உருவாக்கி உள்ளார்.

குடும்ப பிரச்சனையை யூடியூபில் வெளியிட்டு அதனை பொதுப் பிரச்சனை ஆக்கி விட்டனர்.

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்துக்கு துணையாக நின்று கேள்வி கேட்ட லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனை பொதுவெளியில் தகாத வார்த்தைகளால் வனிதா பேசிய நிலையில், இருவருக்குள்ளும் நீயா நானா போட்டி ஒன்று மூண்டிருக்கிறது.

வனிதா பஞ்சாயத்து

வனிதா பஞ்சாயத்து

நீதிமன்றத்தால், முறையாக விவாகரத்து செய்யாத ஒருவரை நடிகை வனிதா விஜயகுமார் 3வதாக திருமணம் செய்தது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. வனிதா விஜயகுமார் திருமணம் செய்து கொண்ட பீட்டர் பால் என்பவருக்கு ஏற்கனவே திருமணமான நிலையில், அவரை விவாகரத்து செய்யாமல், இந்த திருமணத்தை அவர் செய்துள்ளதாக பஞ்சாயத்து எழுந்து இருக்கிரது.

’உன்’ குழாய் அடி சண்டை

’உன்’ குழாய் அடி சண்டை

பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக இயக்குநரும் நடிகையுமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் கஸ்தூரி உள்ளிட்ட பிரபலங்கள் களம் இறங்கி உள்ளனர். குழாய் அடி சண்டையை மிஞ்சும் அளவுக்கு ‘உன்' குழாய் (யூடியூப்) அடி சண்டையாக இது தற்போது விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.

வனிதா விஜயகுமார் vs லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

வனிதா விஜயகுமார் vs லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

வனிதா விஜயகுமார் vs எலிசபெத் ஹெலன் சண்டையாக இருந்தது, தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் கைங்கரியத்துடன் வனிதா விஜயகுமார் vs லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் சண்டையாக நேற்று மாறிப் போனது. எங்க பிரச்சனையில தலையிட நீ யாரு என்றும், ஆபாசமாகவும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனை வனிதா திட்டியதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்தும், ட்ரோல் செய்து மீம்கள் போட்டும் தெறிக்க விடுகின்றனர்.

சும்மா விடமாட்டார் போல

சும்மா விடமாட்டார் போல

இதற்கு மேல் உன்னிடத்தில் பேச முடியாது என இணைப்பை துண்டித்து விட்டு லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் சென்றாலும், இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் அவர் விடுவதாக தெரியவில்லை. தற்போது, #ISupportElizabeth என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, எலிசபெத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும் என ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்.

அதை பண்ணுங்க

அதை பண்ணுங்க

லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக பலர் தற்போது அவர் ட்வீட்டுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், வனிதா விஜயகுமாரின் யூடியூப் பக்கத்தை அன் சப்ஸ்க்ரைப் செய்யுங்க என்றும், அது மட்டும் போதாது, அவரது யூடியூப் சேனலை அதிகளவில் ரிப்போர்ட் அடியுங்க அதுதான் சரியான பதிலடியாக இருக்கும் என பதிவிட்டு வருகின்றனர்.

பெருகும் ஆதரவு

பெருகும் ஆதரவு

வனிதா விஜயகுமார் விவகாரத்தில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் கஸ்தூரி சங்கர் ஆகிய இரு பெண்களும் தீவிரமாகவும் போல்டாகவும் இறங்கி அடிக்கிறீங்க, என்னுடைய ஆதரவு எப்போதுமே உங்களுக்கு இருக்கும். எலிசபெத்துக்கு நீதிமன்றம் வாயிலாக நல்ல நீதி கிடைக்கும் வரை இந்த போராடத்தை நிறுத்த வேண்டாம் என இந்த நெட்டிசன் பதிவிட்டு இருக்கிறார். மேலும், பல நெட்டிசன்களும் வனிதா விஜயகுமாருக்கு ஆதரவாகவும் அவரை திட்டியும் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X