ஹிஜாப் சர்ச்சை.. முற்றுப்புள்ளி வையுங்கள்.. இல்லையேன்றால்.. லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசப் பேச்சு !
சென்னை : ஹிஜாப் சர்ச்சைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வையுங்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசமாக பேசியுள்ளார்.
Recommended Video
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி முதல்வர் திருப்பி அனுப்பியதால் இந்த விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
இந்த வழக்கில் இடைக்கால உத்தரவை பிறப்பித்த கர்நாடக உயர் நீதிமன்றம் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை மாணவர்கள் மதம் சார்ந்த எந்த ஆடையையும் அணிய அனுமதிக்க முடியாது என்று வழக்கை பிப்ரவரி 14ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

லட்சுமி ராமகிருஷ்ணன்
இந்த விவகாரம் குறித்து நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கர்நாடகாவில் நடப்பதை பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இது மிகவும் உணர்வுப்பூர்வமானது. இது இளைஞர்களை தவறான பாதைக்கு வழிநடத்துவது மிகப்பெரிய தவறு. இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

ஹிஜாப் பாதுகாப்பான உணர்வு
நான் ஒரு முஸ்லீம் நாட்டுல 22 வருடங்கள் இருந்திருக்கேன். ஹிஜாப் அணிந்து பழகியவர்களுக்கு அது ரொம்ப பாதுகாப்பான உணர்வு. அதை நீக்க அகற்ற சொல்றது அவங்களுக்கு ரொம்ப காயம் தரக்கூடிய விஷயம், இது ஒரு மனிதநேயமற்ற செயல். இதற்காக இளைஞர்களை தூண்டிவிட்டு போராட்டம் நடத்துவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று

விரைவில் தீர்வு காணுங்கள்
யாரா இருந்தாலும், எந்த வழியில் வாழ்ந்தாலும், அவங்களோட வாழ்க்கைய அவங்க விருப்பப்படி மரியாதையோட கடைபிடிக்கிறதுக்கு எல்லாருக்கும் உரிமை இருக்கு. இந்த மாதிரி ஒரு பாதுகாப்பற்ற உணர்வு முஸ்லீம் பெண்களுக்கு கொடுக்கிறது ரொம்ப தவறானது. தமிழக முதல்வரும், பிரதமரும் தயவு செய்து இதுக்கொரு தீர்வு காண வேண்டும்.

நாங்களும் ஹிஜாப் போடுவோம்
இனியும், ஹிஜாப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்தால், நாங்க அத்தனை பேரும் ஹிஜாப் போட்டு வெளில வர வேண்டியிருக்கும் என லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த வீடியோவில் ஆவேசமாக பேசியுள்ளார். அவரது பேச்சை பல்வேறு தரப்பினரும் ஆதரித்து, அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











