Bayilvan Ranganathan - பயில்வான் ரங்கநாதன் பயந்துட்டாரு போல - மேடையில் பங்கமாய் கலாய்த்த நடிகை

சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) நடிகர், நடிகைகள் குறித்து பல விஷயங்களை பேசும் பயில்வான் ரங்கநாதனை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கமாக கலாய்த்தார்.

சினிமா பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் சில படங்களில் நடித்திருக்கிறார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளராக கலந்துகொள்ளும் பயில்வான் நடிகர், நடிகைகள், கலைஞர்கள் என ஒருவரை விடாமல் ஏடாகூடமாக கேள்வியை கேட்பவர். இதனால் அவர் என்ன கேள்வி கேட்பாரோ என பலர் முன் யோசனையோடு வருவதுண்டு,

 Lakshmi Ramakrishnan Trolls Bayilvan Ranganathan

பாலாவிடம் சிக்கிய பயில்வான்: அப்படி ஒருமுறை பிசாசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பயில்வான் ரங்கநாதன் வாயை விட, அதற்கு பாலாவோ பிசாசு என்றால் கருப்பு சட்டை போட வேண்டும் என்ற அவசியமில்லை. பிங்க் கலர் சட்டைக்கூட போட்டிருக்கலாம் என தனக்கேயுரிய பாணியில் பதிலடி கொடுத்தார். அந்த வீடியோ இன்றுவரை பலரால் ரசிக்கப்படுவதுண்டு.

தாமரையிடம் வம்பிழுத்த பயில்வான்: அதேபோல் அச்சம் என்பது மடமையடா படத்தின் விழா ஒன்றில் பாடலாசிரியர் தாமரையிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இதனையடுத்து யூட்யூப்பில் நடிகர், நடிகைகள் குறித்து வாய்க்கு வந்தபடி எதையாவது பேசிக்கொண்டிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

பதிலடி கொடுத்த ரேகா நாயர்: இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் நிர்வாணமாக நடித்ததைத் தொடர்ந்து தனது இஷ்டத்துக்கு ஏதோ ஒன்றை பேசினார். அதனையடுத்து திருவான்மியூரில் அவர் நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது பயில்வானிடம் சண்டைக்கு சென்றார் ரேகா நாயர். மேலும், அவரை அடிக்கவும் முயன்றார். அதேபோல் நடிகை ராதிகா ஒருமுறை பயில்வான் ரங்கநாதனை செருப்பால் அடித்த சம்பவமும் அரங்கேறியது.

கே.ராஜன் Vs பயில்வான் ரங்கநாதன்: சூழல் இப்படி இருக்க பட விழா ஒன்றில் சமீபத்தில் கலந்துகொண்ட கே.ராஜனிடம் வில்லங்கமான கேள்வியை பயில்வான் ரங்கநாதன் கேட்க, கோபமான ராஜன் மேடையில் வைத்தே கடுமையாக திட்டினார். இவ்வளவு பட்ட பிறகும் தனது அவதூறு பேச்சை பயில்வான் ரங்கநாதன் நிறுத்துவதாக இல்லை. தொடர்ந்து அவ்வாறு வீடியோக்களில் பேசிவருகிறார்.

பயில்வானை கலாய்த்த நடிகை: இந்நிலையில் பிரியமுடன் பிரியா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியை ரேகா நாயர் தொகுத்து வழங்கினார். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேச வந்த லட்சுமி ராமகிருஷ்ணன், ரேகா நாயரை பார்த்து 'எங்கம்மா உன் ஃப்ரெண்ட் பயில்வான் ரங்கநாதன்' என கேட்டுவிட்டு, தயாரிப்பாளர் ராஜனை பார்த்து, 'நீங்கள் இங்கு வந்திருப்பதால் அவர் பயந்துட்டு வரல போல' என நக்கலாக சொன்னார்.

 Lakshmi Ramakrishnan Trolls Bayilvan Ranganathan

இதனைக் கேட்டு அங்கிருந்தவர்கள் பயங்கரமாக சிரித்தனர். இதனையடுத்து ரசிகர்கள், இதுபோல் ஒவ்வொருவரும் பயில்வான் ரங்கநாதனை டீல் செய்தால் அவர் வாயே திறக்கமாட்டார் என கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X