என்ன ஆச்சு… ஏன் இப்படி… அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் மெலிந்த லட்சுமி ராமகிருஷ்ணன்!
சென்னை : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன் .
குணசித்திர நடிகையான இவர் 4 திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
தனது வலைத்தள பக்கத்தில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அறிமுகம்
ஆடை வடிவமைப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் திரைத்துறையில் நுழைவதற்கு முன்பு ஓமனில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் பிஸினஸை நடித்தி வந்துள்ளார். இந்தியா திரும்பியதும் திரைப்படங்களில் நடிக்கவும், இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். சக்கரமுத்து என்ற மலையாள திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

சினேகாவின் அம்மாவாக
கரு பழனியப்பன் இயக்கத்தில் உருவான பிரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படத்தில் சினேகாவின் அம்மாவாக தனது அறிமுகத்தை கொடுத்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்த திரைப்படத்தை அடுத்து பொய் சொல்ல போறோம், நாடோடிகள், வேட்டைக்காரன், விண்ணைத்தாண்டி வருவாயா, பாஸ் என்கிற பாஸ்கரன் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சொல்வதெல்லாம் உண்மை
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. சுமார் 1500க்கும் மேற்பட்ட எபிசோடுகளை இவர் தொகுத்து வழங்கி உள்ளார். என்னம்மா இப்படி பண்றீங்களேமா என்ற வசனம் இவரால் இன்று வரை டிரெண்டிங்கில் உள்ளது.

இயக்குனர்
நடிகை, இயக்குனர், என பன்முகத்தன்மை கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் ஆரோகணம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். மேலும், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி,ஹவுஸ் ஓனர் போன்ற திரைப்படங்களையும் இயக்கி உள்ளார்.

உடல் எடை குறைந்து
சமூக வலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், பல சமூக கருத்துத்துகளை தயங்காமல் கூறிவருகிறார். தற்போது இவர், தனது வலைத்தள பக்கத்தில், அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் மெலிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக உடல் எடை குறையும் போது நம்பிக்கை அதிகரிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











