twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "திருடனைப்" பிடித்து, அடித்துத், துவைத்து, தோரணம் கட்டி தொங்க விட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்!

    |

    சென்னை: நடிகை, இயக்குநர், டிவி டாக் ஷோ நடத்துனர் என ஏகப்பட்ட பொறுப்புகளுடன் வலம் வந்து கொண்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு என்ன கோபமோ தெரியவில்லை, திருடன் போலீஸ் படத்தை கடுமையாக விமர்சித்துத் தள்ளியுள்ளார்.

    திரைத்துறையைச் சேர்ந்த ஒருவரே ஒரு படத்தை, அதிலும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய, நடிப்புத் திறமைக்காக பேசப்படும் இரு இளம் நடிகர்களின் படத்தை இவ்வளவு கடுமையாக விமர்சித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆனால், நான் திட்டுவதெல்லாம் நன்மைக்கே என்று கூடவே விளக்கமும் கொடுத்துள்ளார் சொல்லுவதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி.

    லட்சுமி ராமகிருஷ்ணனின் டிவிட்டர் பக்கத்தில் இந்தப் படத்தைப் பெயர் குறிப்பிடாமல் சரமாரியாக விமர்சித்துள்ளார் லட்சுமி. 14ம் தேதி இந்த "சம்பவம்" நடந்துள்ளது.

    அதிலிருந்து...

    நேற்று ராத்திரி

    நேற்று இரவு ஒரு படம் பார்த்தேன். படமா அது. ஹீரோயினுக்குப் படத்தில் வேலையே இல்லை. தெருவில் அங்கும் இங்குமாக நடந்தபடி இருக்கிறார். ஹீரோ பார்க்க வேண்டும் என்பதற்காக நடந்து கொண்டே இருக்கிறார்.

    இதுவா ஹீரோயிசம்

    ஹீரோவின் செயல்பாடுகள் கடும் எரிச்சலூட்டுகின்றன. முந்தைய படத்தில் நடித்தது போலவே இதிலும் நடித்துள்ளார். ஒரு ஸ்திரம் இல்லை. ஹீரோவின் இந்த நடத்தைகளுக்கான காரணமும், நியாயமும் இல்லை. ஆனால் ஒரே ராத்திரியில் அவரது குணாதிசயம் மாறி விடுகிறதாம்.

    டூயட்டா இது

    மகா போரடிக்கும் டூயட் பாட்டு வேறு. குத்துப் பாட்டு வைத்துள்ளனர். அதற்கு அர்த்தமே இல்லை, பொருந்தவும் இல்லை. வில்லனின் மனைவியை மோசமாக சித்தரித்துள்ளனர். பார்க்கவே ஒரு இன்டரஸ்ட் வரவில்லை.

    கேமியோவா இது

    அப்புறம் முக்கியமாக சொல்ல வேண்டியது, ஒரு பெரிய நடிகரின் கேமியோ பாத்திரம். ஒருவருடைய வாழ்க்கையில் தந்தையின் முக்கியத்துவம் குறித்துப் பாடம் நடத்துகிறார். குழந்தைத்தனமாக இருக்கிறது. பெண்கள் வாயடத்தைப் போய் விட்டனர்.

    ஃபிரண்டா அது

    ஹீரோவின் நண்பர் கேரக்டரும் செம போர். அதே ஸ்டைல். ரவுடியின் சகோதரர் கேரக்டரை சகிக்க முடியவில்லை. இது எந்தப் படம்னு இப்பவாவது புரிகிறதா...

    ஏமாந்து போயி்ட்டேன்

    இந்தப் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் ஏமாந்து போய் விட்டேன்.

    ஐஸ்வர்யா சுதாரிச்சுக்கம்மா

    நான் ஐஸ்வர்யாவுடன் பணியாற்றியுள்ளேன். அருமையான, திறமையான பெண். அவருக்கு சரியான வாய்ப்புகள் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன். அவரது எடை குறைந்துள்ளது. ஆனால் நன்றாக இல்லை, சப்பியான ஐஸ்வர்யாதான் க்யூட்.

    திணேஷ் ஏமாத்திட்டியேப்பா...!

    திணேஷை எனக்குப் பிடிக்கும். அவரிடம் நிறைய எதிர்பார்த்தேன்.

    திட்டுவது நல்லதற்குத்தான்!

    உங்களது படத்தை விமர்சிப்பவர்கள் உங்களது நலம் விரும்பிகளாகத்தான் இருக்க முடியும். இந்த விமர்சனங்கள் உங்களது வளர்ச்சிக்கும் உதவும்.

    இதுல என்ன இங்கிதம்!

    மக்கள் முட்டாள்கள் கிடையாது. அவர்களுக்கென்று சொந்த கருத்துக்கள் உண்டு. அவர்களுக்கென்று சொந்தத் தீர்ப்பு உண்டு. இதுல இங்கிதம் என்ன இருக்கு...?

    கண்டிப்பாக விமர்சிப்பேன்..!

    ரூ. 120 கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் அந்தப் படத்தைப் பற்றி விமர்சிக்கும் உரிமை உள்ளது. எனக்கும் அந்த உரிமை உள்ளது. நான் பார்க்கும் படத்தை கண்டிப்பாக விமர்சிப்பேன். அது நல்ல படமோ, கெட்ட படமோ.

    திணேஷ் - விஜய் சேதுபதி

    திணேஷ் - விஜய் சேதுபதி

    அட்டக்கத்தி நாயகன் திணேஷ்தான் திருடன் போலீஸ் படத்தின் நாயகன். ஜோடியாக நடித்திருப்பவர் ஐஸ்வர்யா. கேமியோ ரோலில் வந்தவர் விஜய் சேதுபதி. லட்சுமி ராமகிருஷ்ணனின் கடும் விமர்சனம் குறித்து இவர்கள் சொல்லப் போவது என்னவோ....!..

    English summary
    Actress- Director Lakshmi Ramakrishnan has critcised the latest flick of Dinesh, Thirudan Police in her twitter page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X