எத்திராஜ் பொண்ணு.. க்ரிக்கெட் ப்ளேயர்.. - ட்ரெண்டாகும் 'லக்‌ஷ்மி' ப்ரியா யார் தெரியுமா?

By Vignesh Selvaraj

Recommended Video

எத்திராஜ் பொண்ணு.. குறும்படம் லக்ஷ்மி .. ட்ரெண்டாகும் 'லக்‌ஷ்மி' ப்ரியா யார் தெரியுமா?- வீடியோ

சென்னை : சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பேசப்படுவது 'லக்‌ஷ்மி' என்ற பெயர் தான். நெட்டிசன்ஸ் மத்தியில் சில நாட்களாக லக்‌ஷ்மி ஃபீவர் அடித்துக்கொண்டிருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் ஒரு சில தினங்களுக்கு முன் வெளிவந்த 'லக்‌ஷ்மி' என்ற குறும்படம் தான். இதில் லக்‌ஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்த லக்ஷ்மி ப்ரியாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சர்ஜுன் இயக்கத்தில் வெளியான 'லக்ஷ்மி' குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் குறும்படம் கௌதம் வாசுதேவ் மேனனின் 'ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' யூ-ட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது.

எத்திராஜ் பொண்ணு

எத்திராஜ் பொண்ணு

சென்னையைச் சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா சென்னை ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் படித்தவர். பிறகு எத்திராஜ் கல்லூரியில் பி.காம் படித்திருக்கிறார். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் ஒர்க்ஸ் கல்லூரியில் பி.ஜி முடித்திருக்கிறார்.

கிரிக்கெட் வீராங்கனை

கிரிக்கெட் வீராங்கனை

விளையாட்டுத் துறையிலும் கலக்கியவர் லக்‌ஷ்மி ப்ரியா. சிறுவயதிலிருந்தே அத்லெட்டாக இருந்தவர், பத்து வயது வருவதற்கு முன்பே ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி பெற்றிருக்கிறார். இவர் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய 'பி' அணியில் இணைந்து போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். தேசிய அளவில் அல்டிமேட் ஃப்ரிஸ்பீ சாம்பியனும் கூட.

ஹெச்.ஆர்

ஹெச்.ஆர்

கல்லூரிக்குப் படிப்புக்குப் பிறகு, ஹோம் சொல்யூஷன்ஸ் ரீடெய்ல் இந்தியா நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலராகப் பணியாற்றியுள்ளார். பிறகு, ஆதித்யா பிர்லா நிறுவனத்தில் ஹெச்.ஆர் அசிஸ்டென்ட் மேனேஜராகவும் பணியாற்றி இருக்கிறார். அதன்பிறகு, சினிமாவில் ஆர்வம் ஏற்பட 'Evam' எனும் தியேட்டர் க்ரூப்பில் இணைந்திருக்கிறார்.

முந்தினம் பார்த்தேனே

முந்தினம் பார்த்தேனே

'Evam' தியேட்டர் க்ரூப்பின் ஷோ டிக்கெட் விற்றுக்கொண்டிருந்த லக்‌ஷ்மியிடம் இயக்குநர் மகிழ் திருமேனி, 'சினிமாவில் நடிக்க வர்றியா?' எனக் கேட்க, 'முன்தினம் பார்த்தேனே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கிறார் லக்‌ஷ்மி ப்ரியா. அதைத் தொடர்ந்து இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய 'தர்மயுத்தம்' என்ற சீரியலில் கூட நடித்தார். 'கௌரவம்' படத்தில் நடித்திருக்கிறார்.

நாயகி

நாயகி

பிறகு 'சுட்டகதை' என்ற படத்தில் லீட் ரோல் செய்திருந்தார் லக்‌ஷ்மி. 'கள்ளப்படம்', 'யாகாவாராயினும் நாகாக்க' உள்ளிட்ட படங்கள், அதைத் தொடர்ந்து 'மாயா' படத்தில் நடித்த இவருக்கு 'லக்‌ஷ்மி' குறும்படம் பெரும் திருப்பத்தை கொடுத்துள்ளது.

மலையாள நடிகை

மலையாள நடிகை

'ஏஞ்சல்ஸ்' எனும் மலையாளப் படத்தில் நடித்தவர், பிஜு மேனன் ஜோடியாக 'சால்ட் மேங்கோ ட்ரீ' படத்தில் நடித்தார். அதன்மூலம் மலையாளத் திரையுலகிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார் லக்‌ஷ்மி ப்ரியா சந்திரமௌலி.

ரிச்சி படத்தில்

ரிச்சி படத்தில்

'12 AM', 'கலைவு', ஃபுல் ஸ்டாப்', 'ஆழ் கடல்' உள்ளிட்ட பல குறும்படங்களில் நடித்திருக்கிறார் லக்‌ஷ்மி ப்ரியா. அடுத்து லக்‌ஷ்மி ப்ரியா நடிப்பில் 'ரிச்சி' படமும் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தில் நிவின்பாலி, நட்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு லக்ஷ்மி ப்ரியா இன்னும் பேசப்படுவார் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X