பிரபுதேவாவின் லக்ஷ்மி ஜெயித்தாரா, இல்லையா?: ட்விட்டர் விமர்சனம் #Lakshmi
சென்னை: ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள லக்ஷ்மி படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், தித்யா பந்தே நடித்துள்ள லக்ஷ்மி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு நடன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
நடனம்
#Lakshmi அருமையான நடன அசைவுகள், உணர்ச்சிகள், மகிழ்ச்சி நிறைந்த டான்ஸ் ட்ரீட். ஏ.எல். விஜய்யின் இயக்கம் சிறப்பு. பிரபுதேவா, ஐஸ்வர்யா, தித்யா சூப்பராக நடித்துள்ளனர். ராக்கிங் டான்ஸ் ஆடிய அனைத்து குழந்தைகளுக்கும் பாராட்டு.
படம்
தித்யாவுக்காக லக்ஷ்மி படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் பாருங்கள். பிரபுதேவா கண்ணில் பட்ட தித்யாவுக்ககாவே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆச்சரியம்
தனது நடன அசைவுகளால் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார் தித்யா. லைட்டா தூக்கம் வந்தாலும் படம் பார்க்கும்படி உள்ளது என்கிறார் ஒருவர்.
பிரபுதேவா
#Lakshmi இடைவேளைக்கு முன்பு பிரபுதேவா தான் யார் என்பதை தெரிவிக்கும் அந்த தருணம் இருக்கே...தியேட்டரில் கரகோஷம் தான். தித்யா பந்தே திறமைசாலி..அருமையான முதல் பாதி... இரண்டாம் பாதிக்காக காத்திருப்பு.
அருமை
#Lakshmi இடைவேளை: தித்யா தனது நடன அசைவால் கவர்கிறார்
பிரபுதேவா வழக்கம் போன்று அருமை
கணிக்க முடிகிறது ஆனாலும் நன்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications











