மான நஷ்ட வழக்கு.. ஒரு கோடியே 25 லட்சம் கொடுக்கணுமாம்.. சட்ட ரீதியாக சந்திப்பதாக வனிதா சவால்!

சென்னை: கடந்த 20ம் தேதி யூடியூப் நேரலையில், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனை தர குறைவாக நடிகை வனிதா பேசியதாக அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Recommended Video

Vanitha இழிவுபடுத்தியதை கண்டித்து Lakshmi Legal Notice

நடிகை வனிதா விஜயகுமாரின் 3வது திருமணம் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

முறையாக விவாகரத்து ஆகாத பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டது தொடர்பாக பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் களமிறங்கிய நிலையில், இந்த சர்ச்சை பூதாகரமானது.

கணவருடன் வீடியோ

கணவருடன் வீடியோ

யூடியூப் சேனல் நடத்தி வரும் நடிகை வனிதா, கணவர் பீட்டர் பாலுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், முதல் மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்டதாகவும், தற்போது காசுக்காக பொது வெளியில் பேசி வருவதாகவும் பீட்டர் பால் குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது.

ஹெலனுக்கு ஆதரவாக

ஹெலனுக்கு ஆதரவாக

அதனை தொடர்ந்து எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவாக இயக்குநரும் நடிகையுமான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த வீடியோவில், நீதிக்கு புறம்பாக பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து இருப்பது குறித்து லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் விளாசி இருந்தார். மேலும், ஹெலனுக்கு ஆதரவாக போராட போவதாகவும் அறிவித்தார்.

லைவில் சண்டை

லைவில் சண்டை

அதனை தொடர்ந்து, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா விஜயகுமார், கடந்த ஜூலை 20ம் தேதி நேருக்கு நேர் யூடியூப் உரையாடலில் பங்கேற்றனர். அப்போது, நடிகை வனிதா விஜயகுமார், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனை தொடர்ந்து தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு, வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மான நஷ்ட வழக்கு

மான நஷ்ட வழக்கு

அந்த வீடியோ சாட்டின் போது, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் பதிலுக்கு பதில் பேசாமல் சிரித்துக் கொண்டே இருந்தார். இந்நிலையில், தற்போது, தன்னையும் தனது கணவர் ராமகிருஷ்ணனனையும் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியதற்கு வனிதா மன்னிப்பு கோர வேண்டும் என மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்.

ஃபேக் ஜட்ஜ்

ஃபேக் ஜட்ஜ்

இந்நிலையில், தற்போது அந்த கோர்ட் நோட்டீஸ் தகவல் அடங்கிய காப்பியை ட்விட்டரில் பதிவிட்ட வனிதா, நல்ல உள்ளம் கொண்ட சமூக போராளி, ஒரு கோடியே 25 லட்சம் கொடுக்க வேண்டும் என தன்னை மிரட்டுவதாகவும், இது தொடர்பான வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தான் தயார் என நடிகை வனிதா சவால் விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X