Lal Salaam: லால் சலாம் தோல்வி... ஐஸ்வர்யா ரஜினியை சுற்றும் பஞ்சாயத்து... விஷ்ணு விஷால் அப்செட்..?
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் இந்த மாதம் 9ம் தேதி வெளியானது. ரஜினி கேமியோ ரோலில் நடித்திருந்தும் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரக்தியில் இருப்பதாகவும், இன்னொரு பக்கம் விஷ்ணு விஷாலும் அப்செட்டாக வலம் வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லால் சலாம் தோல்வியில் அடுத்தடுத்து பஞ்சாயத்து: தனுஷின் 3 திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. இரண்டாவதாக கெளதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. அதன்பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின் லால் சலாம் மூலம் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்த இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோவாக நடித்திருந்தார். மொய்தீன் பாய் என்ற மும்பை கேங்ஸ்டராக ரஜினி நடித்துள்ளதாக ப்ரோமோஷன் செய்யப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் லால் சலாம் படத்துக்கு அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதோடு லைகா தயாரிப்பில் ஏஆர் ரஹ்மானும் இந்தப் படத்திற்கு இசையமைத்ததால் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகமானது.
பாட்ஷா லெவலுக்கு லால் சலாம் ரஜினியின் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் வெளியான முதல் நாளே லால் சலாம் தோல்வியடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. மேக்கிங், திரைக்கதை எதிர்பார்த்தளவில் இல்லை என்றும், ரஜினியின் போர்ஷனில் ரசிகர்களுக்கு பெரிதாக எந்த சர்ப்ரைஸ்ஸும் வைக்கவில்லை எனவும் ஐஸ்வர்யா ரஜினி மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் லால் சலாம் இதுவரை 15 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரொம்பவே அப்செட்டான ஐஸ்வர்யா, லைகா சுபாஸ்கரனுக்கு போன் போட்டு புலம்பியுள்ளாராம். லால் சலாம் படத்துக்கு லைகா தரப்பில் சரியாக ப்ரோமோஷன் செய்யவில்லை என தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். சுபாஸ்கரனும் உடனே லைகா நிர்வாகிகளிடம் போனில் பேசியதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் விஷ்ணு விஷாலும் ஐஸ்வர்யா மீது அதிருப்தியில் இருக்கிறாராம். கட்டா குஸ்தி படம் மூலம் கம்பேக் கொடுத்து தனது மார்க்கெட்டை பிடித்த விஷ்ணு விஷாலுக்கு, லால் சலாம் பெரிய டிசாஸ்டர் படமாக ஆகிவிட்டதே என்ற வருத்தத்தில் உள்ளாராம். இந்தப் படத்தில் முதலில் விஷ்ணு விஷாலுக்கு பதிலாக அதர்வா நடிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. லால் சலாம் தோல்வியால் ஐஸ்வர்யா ரஜினியை சுற்றி இன்னும் பல பஞ்சாயத்துகள் வலம் வருவதாக வலைப்பேச்சு நிகழ்ச்சியில் அப்டேட் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











