Lal Salaam Box Office: லால் சலாம் 3வது நாள் வசூல் எவ்வளவுன்னு தெரியுமா..? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

சென்னை: ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். லைகா தயாரித்துள்ள இந்தப் படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் பிப்.9ம் தேதி வெளியானது. முன்னதாக பொங்கலுக்கு ரிலீஸாகவிருந்த லால் சலாம், கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்நிலையில், லால் சலாம் படத்தின் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

லால் சலாம் மூன்றாவது நாள் கலெக்‌ஷன்: ஜெயிலரில் நடித்துக் கொண்டிருக்கும் போதே லைகா நிறுவனத்துடன் இரண்டு படங்களில் கமிட்டானார் ரஜினிகாந்த். அதில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தில் கேமியோவாக நடிக்கவும் கால்ஷீட் கொடுத்திருந்தார். அதன்படி ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் கடந்த வாரம் 9ம் தேதி ரிலீஸானது. ஏஆர் ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.

 Lal Salaam Box Office Day 3: Rajinis Lal Salaam movie collected Rs 3 crore in third Day

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் எனது அப்பா ரஜினி சங்கி இல்லை என ஐஸ்வர்யா பேசியது வைரலானது. ரஜினி சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்கவே மாட்டார் எனக் கூறியிருந்தார். இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான லால் சலாம் படத்துக்கு முதல் நாளில் இருந்தே சரியான ஓபனிங் கிடைக்கவில்லை. ரஜினி கேமியோ ரோலில் நடித்திருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அவர் 45 நிமிடங்கள் வரை திரையில் வருகிறார், விக்ராந்த் தான் கேமியோ ரோல் செய்துள்ளார் என்றெல்லாம் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் ஆக்‌ஷன் சீன்ஸ், சென்டிமெண்ட் இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் லால் சலாம் செல்ஃப் எடுக்கவில்லை என்றே சொல்லப்படுகிறது. கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து, இந்து, முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தி மதவாத அரசியல் குறித்து பேசியிருந்தது லால் சலாம். ஆனாலும் ரஜினியின் மீதான அதிருப்தியில் தான் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை என சினிமா விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், லால் சலாம் படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவில் இல்லை என்றே பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் 3.55 கோடி ரூபாய் வசூல் செய்த லால் சலாம், இரண்டாவது நாளிலும் 3.25 கோடி ரூபாய் மட்டுமே கலெக்‌ஷன் செய்திருந்தது. இதனால் ஞாயிற்றுக் கிழமையான நேற்று லால் சலாம் வசூல் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் நேற்றும் லால் சலாம் கலெக்‌ஷன் மிக மோசமான நிலையில் தான் உள்ளது.

அதன்படி லால் சலாம் மூன்றாவது நாள் வசூல் 3 கோடி ரூபாய் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் முதல் மூன்று நாட்களில் லால் சலாம் வசூல் 10 கோடி ரூபாயை கூட கடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லால் சலாம் வசூல் முதல் வாரமே மிக மோசமான நிலையில் இருப்பதால், அடுத்தடுத்த நாட்களில் இதைவிட குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள லால் சலாம் முதலுக்கே மோசமாகிவிடும் நிலையில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X