Lal Salaam Box Office: லால் சலாம் முதல் நாள் வசூல்..? பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் மொய்தீன் பாய்!
சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் நாளை (பிப். 9) ரிலீஸாகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனால் அட்வான்ஸ் ப்ரீ ரிலீஸ் புக்கிங்கில் லால் சலாம் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனடிப்படையில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
லால் சலாம் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு
3, வை ராஜா வை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யாவின் மூன்றாவது படமான லால் சலாமில் மகளுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடித்துள்ளார். ஹீரோவாக இல்லாமல் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ளது லால் சலாம் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ரஜினியின் காட்சிகள் 15 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில், இப்போது 45 நிமிடங்களுக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டாருடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து, ஜாதி, மதம் என அரசியலையும் சேர்த்து லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். முக்கியமாக மத அரசியலுக்கு எதிரான படமாக இது இருக்கும் எனவும் அவர் கூறியிருந்தார். இதனால் லால் சலாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.
ராமர் கோயில் விசிட், உபி முதலமைச்சர் யோகியின் காலில் விழுந்து ஆசி வாங்கியது என ரஜினியை சுற்றி பல சர்ச்சைகள் உள்ளன. இதனிடையே அவரது மகள் ஐஸ்வர்யாவும் எனது அப்பா சங்கி இல்லை என லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ஆவேசமாக பேசியிருந்தார். இத்தனை அட்ராசிட்டிகளுக்கும் நடுவில் ரஜினி மத அரசியலுக்கு எதிரான படத்தில் நடித்திருப்பதே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், லால் சலாம் ப்ரீ ரிலீஸ் அட்வான்ஸ் புக்கிங் படத்திற்கு பாசிட்டிவான வரவேற்பை கொடுத்துள்ளதாம். சென்னை, மதுரை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற சிட்டி ஏரியாக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் டிக்கெட் புக்கிங் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே உள்ளது. இதனால் லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 5 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என சொல்லப்படுகிறது.
லால் சலாம் முழுமையான ரஜினியின் படமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல் நாள் வசூல் 5 கோடி வரை இருக்கும் என வெளியான தகவல், படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் ரஜினியின் கேமியோ ரோல் நன்றாக இருந்தால் லால் சலாம் 100 கோடி ரூபாய் கிளப்பில் கூட எளிதாக இணைந்துவிடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











