Lal Salaam Box Office: ஒரே வாரத்தில் இந்த நிலைமையா.. லால் சலாம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவு தானா..?
சென்னை: ஐஸ்வர்யா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். லைகா தயாரிப்பில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த இந்தப் படம், பிப்ரவரி 9ம் தேதி வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லால் சலாம் படத்துக்கு முதல் நாளில் ஓரளவு ஓபனிங் இருந்தது. ஆனால், முதல் வாரம் முடிந்த நிலையில் லால் சலாம் படத்தின் வசூல் ரொம்பவே மோசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்தித்த லால் சலாம்
ஜெயிலரை தொடர்ந்து மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்திருந்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்த இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது.

ரஜினிகாந்த் கேமியோவாக நடித்திருந்ததால் லால் சலாம் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதிலும் அவர் பாட்ஷா படத்துக்குப் பின்னர் லால் சலாமில் முஸ்லீம் கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல் பாட்ஷா ஸ்டைலில் அதே மும்பை கேங்ஸ்டர் என ப்ரோமோஷன் செய்யப்பட்டது. இதனால் ரிலீஸுக்கு முன்னர் வெளியான லால் சலாம் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்திருந்தது.
அதேபோல் இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் படக்குழு முதலில் அறிவித்திருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்த படக்குழு, பிப்.9ம் தேதி வெளியிட்டது. இதனையடுத்து முதல் நாளில் நலல் லால் சலாம் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தாலும், 3.55 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. இரண்டாவது நாளிலும் 3.25 கோடி மட்டுமே கலெக்ஷன் செய்திருந்தது. மூன்றாவது நாள் வசூல் 3 கோடி ரூபாய் என கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.
முதல் மூன்று நாளுக்குப் பின்னர் லால் சலாம் வசூல் மிக மோசமான நிலையை நோக்கி செல்லத் தொடங்கியது. ஒருகட்டத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாக கலெக்ஷன் செய்த லால் சலாம், கடந்த வெள்ளிக் கிழமையன்று வெறும் 27 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இது ரஜினியின் ரீ-ரிலீஸாகும் படங்களை விட மோசமான வசூல் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் ஒட்டுமொத்தமாக இதுவரை 15.35 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாம் லால் சலாம்.
40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள லால் சலாம், இதுவரை 15 கோடி மட்டுமே வசூலித்துள்ளது லைகா நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் எனது அப்பா ரஜினி சங்கி இல்லை என ஐஸ்வர்யா பேசியது வைரலானது. ரஜினி சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்கவே மாட்டார் எனக் கூறியிருந்தார். இதுதான் லால் சலாம் படத்தின் தோல்விக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
அதாவது என்ன தான் ஐஸ்வர்யா தனது அப்பாவை சங்கி இல்லை என சொன்னாலும், ரஜினியின் செயல்பாடுகள் அப்படி தான் உள்ளன. ஜெயிலர் ரிலீஸாகும் வரை பொறுத்திருந்த ரஜினி, அது ஹிட்டானதும் அயோத்திக்கு சென்றார். மேலும் உபி முதலமைச்சர் யோகியின் காலில் ஆசி வாங்கியதும் தமிழ் ரசிகர்களிடம் பெரும் அதிருப்தியை கொடுத்தது. இந்த கோபத்தில் தான் லால் சலாம் படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











