Lal Salaam: மத ரீதியான சர்ச்சையான வசனங்கள்... லால் சலாம் படத்துக்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல்..?

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் நாளை (பிப்.9) திரையரங்குகளில் ரிலீசாகிறது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில், லால் சலாம் படத்தில் சில சர்ச்சைக்குரிய வசனங்கள் இருப்பதாக கடைசி நேரத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளன.

லால் சலாம் படத்திற்கு வந்த சிக்கல்
லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இவர்களுடன் தான்யா பாலச்சந்திரன், நிரோஷா, தம்பி ராமையா, செந்தில் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 Lal Salaam: Controversial Dialogues have been removed from Rajinis Lal Salaam

மொய்தீன் பாய் என்ற மும்பை கேங்ஸ்டராக ரஜினிகாந்த் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 3, வை ராஜா வை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ள மூன்றாவது படமாக லால் சலாம் உருவாகியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து மத அரசியல் குறித்து பேசும் படமாக லால் சலாமை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதனால் வசனங்களில் மத அரசியல் குறித்து அதிகம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இப்போது அதுவே லால் சலாம் படத்துக்கு சிக்கலாக உருவெடுத்துள்ளது. அதாவது லால் சலாம் படத்தில் சுமார் 2.32 நிமிடங்களுக்கு மத அரசியல் பற்றி வசனங்கள் இடம்பெற்றுள்ளதாம். அதில் சில தகாத வார்த்தைகள் இருப்பதால் அவைகளை நீக்க வேண்டும் என சென்சார் போர்டு கூறியுள்ளது. இதனையடுத்து லால் சலாம் படத்தில் இருந்து மத ரீதியான வசனங்களை படக்குழு நீக்கியுள்ளது.

அப்படி இருந்தும் இந்தப் படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி குறித்து ஐஸ்வர்யா பேசியது வைரலானது. அதில் என் அப்பா ரஜினி சங்கி இல்லை என்றும், அடிக்கடி இதனை கேட்கும் போது மனதுக்கு கஷ்டமாக இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், ரஜினி சங்கியாக இருந்திருந்தால் லால் சலாம் போன்ற படத்தில் நடித்திருக்க மாட்டார் எனவும் பேசியிருந்தார்.

இதனால் லால் சலாம் படத்தில் மத ரீதியான வசனங்கள் அதிகம் இருக்கும் என சொல்லப்பட்டது. சொன்னபடி அப்படி இருந்தும் தற்போது சென்சாரில் பிரச்சினையை சந்தித்துள்ளது லால் சாலாம். இருப்பினும் சர்ச்சைக்குரிய வசனங்களை படக்குழு நீக்கியுள்ளதால் எந்த பிரச்சினையும் இல்லாமல் லால் சலாம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X