Lal Salaam: மகள் ஐஸ்வர்யாவுக்கே கண்டிஷன் போட்ட ரஜினி... பரபரக்கும் லால் சலாம் ஸ்பாட்!

மும்பை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது.

ஜெயிலர் ரிலீஸ் தேதி அப்டேட்டால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா இயக்கத்தில் லைகா தயாரிக்கும் லால் சலாம் படத்தில் ரஜினி கமிட் ஆகியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக மகள் ஐஸ்வர்யாவுக்கே ரஜினி கண்டிஷன் போட்டுள்ளாராம்.

 Lal Salaam Film Second Schedule Of Shooting Has Begun In Mumbai

லால் சலாம் அப்டேட்:சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரஃப், தமன்னா, ரம்யா கிருஷ்னன், யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர், அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜெயிலர் ரிலீஸ் தேதியால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில், அடுத்து லால் சலாம் டீம் இன்னொரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா தயாரிக்கும் இந்தப் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்து வருகிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் லீடிங் கேரக்டரில் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் ரஜினியின் போர்ஷன் மட்டும் மும்பையில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். மும்பையில் உள்ள பிரலமான ஸ்டுடியோவில் ரஜினியின் காட்சிகளை எடுக்க ஐஸ்வர்யா முடிவு செய்துள்ளாராம். அதன்படி இந்த படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் தொடங்கவுள்ளதாம். இதில் கலந்துகொள்ள ரஜினியும் மும்பை பறந்துள்ளாராம்.

மேலும், ரஜினியுடன் காமெடி நடிகர் தம்பி ராமையாவும் இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. லால் சலாம் படத்தில் மொத்தமே 20 முதல் 30 நிமிடங்கள் வரை தான் ரஜினியின் காட்சிகள் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த காட்சிகள் முழுவதும் ரசிகர்களுக்கு மாஸ் எனர்ஜி கொடுக்கும் என லால் சலாம் படக்குழுவில் இருந்தே தகவல்கள் கிடைத்துள்ளன.

 Lal Salaam Film Second Schedule Of Shooting Has Begun In Mumbai

இந்நிலையில், இன்று மும்பையில் தொடங்கிய லால் சலாம் ஷூட்டிங், இரண்டு வாரங்கள் வரை நடைபெறும் என சொல்லப்படுகிறது. அதற்குள்ளாக ரஜினியின் காட்சிகளை மட்டும் படமாக்கிவிட ஐஸ்வர்யா பிளான் செய்துள்ளாராம். அதன் பின்னர் தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. அதற்கு முன்பாகவே லால் சலாம் படப்பிடிப்பை முடித்துவிட வேண்டும் என ஐஸ்வர்யாவுக்கு கண்டிஷன் போட்டுள்ளாராம் ரஜினி.

தலைவர் 170 படப்பிடிப்பு தொடங்கியதும் தன்னை தொந்தரவு செய்யக்கூடாது என ஸ்டிரிக்ட்டாக கூறிவிட்டாராம் ரஜினி. ஜெயிலர், லால் சலாம் படப்பிடிப்பு முடிந்துவிட்டால் அதன் பிறகு தலைவர் 170 படத்தில் மட்டுமே கவனம் செலுத்த இப்படி முடிவெடுத்துள்ளாராம் ரஜினி. அப்பாவின் கண்டிஷனை புரிந்துகொண்ட ஐஸ்வர்யா, லால் சலாம் படத்தில் ரஜினியின் போர்ஷனை ஒரேகட்டமாக முடிக்கவே தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X