என்னையும் அமீர்கானையும் அஜித் எப்படி காப்பாத்தினாரு.. லால் சலாம் ஹீரோ விஷ்ணு விஷால் ஓபன் டாக்!

சென்னை: லால் சலாம் படம் இந்த வாரம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால் தீவிரமாக படத்தை புரமோட் செய்து வருகிறார் சமீபத்தில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அஜித் சார் உங்களை எப்படி வெள்ள பாதிப்பில் இருந்து காப்பாற்றினார். உண்மையாகவே அங்கே நடந்தது என்ன? அமீர்கான் அங்கே எப்படி வந்தார் என்கிற கேள்வியை எழுப்ப அதற்கு தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.

கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டு மக்களுக்கு ரொம்பவே கஷ்ட காலம் என்று தான் சொல்ல வேண்டும். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அதன் பின்னர் பெருமழை காரணமாக தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கல் கடும் சேதத்தை சந்தித்தன. கடைசியாக விஜயகாந்த் மரணம் என மக்கள் கடந்த ஆண்டு இறுதியில் ரொம்பவே கஷ்டங்களை அனுபவித்தனர்.

Lal Salaam hero Vishnu Vishal talks about how Ajith Kumar rescue him and Amir Khan during flood

விஷ்ணு விஷால் வீட்டில் அமீர்கான்: பாலிவுட்டின் பிரபல நடிகர் அமீர்கான் தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஆண்டு இறுதியில் சென்னைக்கு வந்திருந்தார். விஷ்ணு விஷாலின் வீட்டில் தான் அவர் விருந்தினராக தங்கியிருந்திருக்கிறார். அமீர்கான் அம்மாவின் உடல் குணமடைந்து அன்றைய தினம் சென்னையை விட்டு அவர் கிளம்ப வேண்டிய நாளில் கனமழை காரணமாக வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார் எனக் கூறியுள்ளார் விஷ்ணு விஷால்.

காப்பாற்றிய மாநகராட்சி ஊழியர்கள்: கிரவுண்ட் லெவலுக்கு மேல் தண்ணீர் வந்த நிலையில், அடுத்து மாடிக்கும் வந்து விட்டால் சிக்கல் தான் என நினைத்து பயந்து தான் அந்த போஸ்ட்டை போட்டேன். யாராவது பார்த்து காப்பாற்றுவார்களே என நினைத்து உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் வந்து என்னையும் அமீர்கானையும் காப்பாற்றினர். எங்களுடைய உழைப்பு ஏதும் தெரிய மாட்டேங்குது சார் ஒரு போட்டோ எடுத்துக்கிறோம்னு கேட்டதால அமீர்கான் சாரிடம் கேட்டேன். அவங்க தான நம்மளை காப்பாத்துறாங்க தாராளமா எடுத்துக்கட்டும் என்றார்.

Lal Salaam hero Vishnu Vishal talks about how Ajith Kumar rescue him and Amir Khan during flood

அஜித் சார் பண்ண உதவி: என்னோட வீட்ல கார் எல்லாம் மூழ்கிடுச்சு, போட்ல நாங்க ஒரு இடத்துக்கு வந்தாலும், அங்கிருந்து வேறு ஒரு இடத்துக்குச் செல்ல கார் தேவைப்பட்டது. அப்போதான் அஜித் சார் எனக்கும் அமீர்கான் சாருக்கும் வாகனங்களை ஏற்பாடு செய்து சேஃபான இடத்துக்கு செல்ல உதவினார். மற்றவர்கள் செய்த உதவிகள் பற்றி சொன்ன நிலையில், அஜித் சார் செய்த உதவியையும் சொன்னால் தான் அது கம்ப்ளீட் ஆகும் என்று தான் சொன்னேன். ரொம்பவே ஸ்வீட்டான பர்சனுங்க, ஒரு போன் பண்ணிட்டு உடனே ஓடோடி வந்து எங்களை சந்தித்தார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X